உன்னை பிரிந்து 5 மாசம் ஆச்சி – தன் தோழியை நினைத்து கலங்கிய யாஷிகா . வீடியோ இதோ

0
326
yashika
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். மேலும், யாஷிகா மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது. இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தன் உடல் நலம் குறித்து பதிவிட்ட யாஷிகா, இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-

5 மாதங்கள் யாஷிகா அனுபவித்த வேதனை :

This image has an empty alt attribute; its file name is yashikka.jpg

அதே போல தன் உடல் நிலை குறித்து பதிவிட்ட யாஷிகா, இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காலில் எலும்பு முறிவு. சர்ஜரிக்குப் பிறகு ஓய்வெடுத்து வருகிறேன். என்னால் அடுத்த 5 மாதத்திற்கு நிற்கவோ நடக்கவோ முடியாது. அதனால் இயற்கை உபாதைகள் உட்பட எல்லாமே படுக்கையில் தான். இடம், வலம் கூட திரும்ப முடியாது. எனது முதுகு பலத்த காயமடைந்துள்ளது என்று கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : அவரை நம்பி தயாரிப்பாளர் எவ்வளவு முதலீடு செய்திருக்கிறார் ? – சிம்புவின் செயலால் விஜய் தந்தை அதிருப்தி.

- Advertisement -

விபத்தில் இறந்த தோழி :

இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி உயிரிழந்தால் குற்ற உணர்ச்சிக்கு உள்ளானார் யாஷிகா. மேலும், விபத்திற்கு பின்னர் யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் தனக்கு வாழவே பிடிக்கவில்லை என்றும் வாழ்க்கை முழுதும் தன் தோழியை கொன்ற குற்ற உணர்வுடன் தான் இருப்பேன் என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் தன் தோழியுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார் யாஷிகா.

Yashika Aannand and Valisetty Bhavani made risky mistakes that caused fatal  accident? - Tamil News - IndiaGlitz.com

அதில், என்னுடைய மிகப்பெரிய நலன் விரும்பி உடன்பிறவா சகோதரி என்றும் நான் உன்னை மிஸ் செய்தேன் உன்னை நினைக்காமல் ஒரு நாளும் சுலபமாக செல்வது இல்லை நான். பின்னோக்கி சென்று அனைத்தையும் சரி செய்ய ஆசைப்படுகிறேன். நீ எனக்கு கொடுத்த பல்வேறு அழகான நினைவுகளுக்கு நான் என்றும் கடமைப் பட்டிருக்கிறேன். இப்போது என்னுடைய தேவதை எங்களை மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறாய்.

-விளம்பரம்-

தோழியை நினைத்து வேதனை :

நீ ஒரு மாணிக்கம் நான்தான் உன்னை நொறுக்கி விட்டேன். நீ இல்லை என்பதை என் மனது ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் இருவரும் சேர்ந்து சாப்பிட்டது மேக்கப் போட்டது அனைத்தையும் என்னால் மறக்க முடியவில்லை. உனக்கு நிச்சயம் ஒரு நல்ல இடம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். விரைவில் உன்னை சந்திக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறினார்கள். இப்படி ஒரு நிலையில் தன் தோழியை நினைத்து அடிக்கடி அழுத வீடியோகளை பதிவிட்டு இருக்கிறார்.

ஹேட்டர்ஸ்களுக்கு பதிலடி :

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் யாஷிகா தன் இன்ஸ்டா ஸ்டேட்டஸ்ஸில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் , அந்த வீடியோவில் படுக்கையில் உருண்டு கொண்டு இருக்கும் யாஷிகா ‘நடந்து கொண்டு இருப்பதை நம்புங்கள், அனைத்தும் நன்றாக நடக்கும். என்னுடைய ஹேட்டர்ஸ்களுக்கு என்னால் உருண்டு புரண்டு படுக்க முடிகிறது அதனால் நான் சிரித்துக் கொண்டிருக்கிறேன் இதுவே எனக்கு சாதனைதான்’ என்று பதிவிட்டிருந்தார் யாஷிகா.

Advertisement