இது தான் ஜெனிலியாவின் அம்மாவா.! முதல் முறையாக அவரே வெளியிட்ட புகைப்படம்.!

0
408

புதுமுகங்களை மட்டும் வைத்து கடந்த 2003ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிகர் சித்தார்த்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ஜெனிலியா.

அதன்பின்னர் இளைய தளபதி விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான சச்சின் படத்தில் நடித்து ரசிகர் மத்தியில் பிரபலமடைந்தார். மேலும், ஜெயம் ரவி நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பின்னர், பல பெண்களும் ஹாசினி போலவே இருக்க வேண்டும் என்று எண்ணும் அளவிற்கு அந்த படத்தில் இவரது கதாபாத்திரம் மிகவும் பாராட்டப்பட்டது.

இதையும் படியுங்க : என்ன கன்றாவிடா இது.!சகுனி பட நடிகையின் புதிய கெட்டப்பை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.! 

- Advertisement -

இதுவரை தமிழில் உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படத்தில் நடித்த இவர், அதன் பின்னர் தமிழில் நடிக்கவில்லை, இருப்பினும் இந்தியில் பல படங்களில் நடித்து வந்தார். பின்னர் 2012 இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் இரண்டு குழந்தைக்கு தாயான ஜெனிலியா அதன் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

இறுதியாக மௌலி என்ற இந்தி படத்தை தயாரித்திருந்தார். மேலும், ஒரு சில இந்தி படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்ற அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகை ஜெனிலியா.

-விளம்பரம்-
Advertisement