பிக்பாஸ் விட்டு வெளியேறும் போது தானாக முன்வந்து பொன்னம்பலத்திடம் அசிங்கப்பட்ட சென்ராயன்.!

0
273

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பொன்னம்பலம் வெளியேற்றப்பட்டுள்ளார். மிகவும் வித்யாசமாக நடந்த இந்த வாரத்திற்கான எலிமினேஷன் அறிவிப்பு போட்டியாளர்களுக்கு, பார்வையரல்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீதம் 11 நபர்களே உள்ள நிலையில் அடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறபொது சென்றாயன் தான் என்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக பொன்னம்பலம் கிண்டலாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

Ponambalam

நேற்று(ஆகஸ்ட் 12) பிக் பாஸ் வீட்டைவிட்டு பொன்னம்பலம் வெளியேறியதால் அவர் வீட்டை விட்டு செல்லும் முன்னர், போட்டியாளர்கள் சிலர் பொன்னம்பலத்தின் காலில் விழுந்து ஆசி வாங்கி கொண்டு அவரை வழியனுப்ப தயாராகி இருந்தனர். அப்போது வைஷ்ணாவை , நீ பைனல் வர வேண்டும் என்று பொன்னம்பலம் கூறுகையில் அருகில் இருந்த சென்றாயனும் ‘அண்ணே, எனக்கு எதாவது சொல்லங்கண்னே என்று கேட்க, அதற்கு பொன்னம்மபலம் ‘நான் முன்னால போனா, நீ பின்னாலே வாயேன்’ என்று கிண்டலாக பாட, அருகில் இருந்த மற்ற போட்டியாளர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர்.

பொன்னம்பலம் அப்படி பாடியதும் சற்று அதிர்ச்சியடைந்த சென்றயான், ‘போனே அண்ணே, என்னனே இப்படி சொல்லிடீங்க ‘ என்று கொஞ்சம் மனமுடைந்து பேசினார். அதற்கு பொன்னம்பலம் ‘நான் ,உன்ன ஒடனே வானு சொல்லல பா. ஜெய்ச்சிட்டு பின்னாடி கடைசியா வானு தா சொன்ன’ என்று கூறி எப்படியோ சமாளித்துவிட்டார்.

ponambalam-bigg-boss

ஆனால், உண்மையில் தனக்கு பின்னர் சென்றாயான் தான் அடுத்த எலிமினேஷன் என்பதை பொன்னம்பலம் சற்று சூட்சமாக தான் சொன்னார் என்பதை நம்மால் உணர முடிகிறது. இந்த வாரம்தான் முதல் முறையாக சென்ராயன் நாமினேஷனில் வந்திருந்தார். ஆனால், மக்களால் எப்படியோ இந்த வாரம் காப்பற்றபட்டுவிட்டார் சென்றராயன். ஒரு வேலை அவர் மீண்டும் நாமினேஷனில் வந்தால் அவரை மக்கள் மீண்டும் காப்பாற்றுவார்களா என்பதை பொறுத்திருந்து காணலாம்.