முத்தம் கொடுக்க வந்த கணவரின் நாக்கை மனைவி கடித்து குதறி இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில் இதுகுறித்து அனிதா சம்பத் கேலியான பதிவு ஒன்றை போட்டுள்ளார். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் எல்லம் குட்டா தாண்டா கிராமத்தை சேர்ந்தவர் தாராசந்த். இவர் கர்னூல் மாவட்டம் துக்கலி மண்டலத்தைச் சேர்ந்த புஷ்பவதி என்ற பெண்ணை கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்திருந்தார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். திருமணம் ஆன புதிதில் இரண்டு பேருமே சந்தோஷமாகத்தான் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள். பின் வழக்கம் போல கணவர் மனைவிக்கு இடையில் வரும் சண்டை போல் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்தது. இருந்தாலும் இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக தான் வாழ்ந்து வந்தார்கள். மேலும், புஷ்பவதி தன்னுடைய கணவருடன் மட்டுமில்லாமல் அவருடைய உறவினர்களிடமும் நன்றாக தான் பேசி பழகி வந்திருக்கிறார்.
விழாக்கள் காலங்களில் தன்னுடைய கணவரின் உறவினர்கள் எல்லாம் வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தும் உபசரித்து இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களாகவே புஷ்பவதியும் அவருடைய கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் கடந்த 21ஆம் தேதி காலை வழக்கம் போல் இருவருக்கும் மத்தியில் சண்டை நடந்திருக்கிறது.
இதனால் கோபத்தில் இருந்த மனைவியை சமாதானம் செய்ய தாராசந்த் முத்தம் கொடுக்க கிட்டே சென்றிருக்கிறார். ஆனால், அதற்கு அவருடைய மனைவி மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இருந்தாலும், விடாமல் கட்டாயப்படுத்தி முத்தம் கொடுக்க தாராசந்த் முயற்சி செய்து இருக்கிறார். இதனால் கோபம் தாங்க முடியாத அவருடைய மனைவி புஷ்பவதி அவருடைய நாக்கை கடித்து இருக்கிறார். பின் தாராசந்த் நாக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்திருக்கிறது.
மேலும், வலியால் துடி துடித்துப் போன தாராசந்த் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். பின் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காயத்திற்கு மருந்து போட்டு விட்டு சிகிச்சை அளித்து இருக்கிறார்கள். மேலும், இந்த சம்பவத்தை பார்த்த தாராசந்த் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி ஏற்பட்டு இருக்கிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனிதா சம்பத் கேலி :
அப்போது போலீஸ் விசாரித்ததில் தனக்கு கட்டாயப்படுத்தி தன்னுடைய கணவர் முத்தம் கொடுத்ததால் தான் நாக்கை கடித்து விட்டதாக புஷ்பவதி கூறி இருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் தாராசந்த்தை எண்ணி பரிதாபப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த செய்தியை பகிர்ந்துள்ள அனிதா சம்பத் ‘ இத்தன நாளா இந்த டெக்னீக் தெரியமா போச்சே ‘இன்னிக்கி ஒரு கடி’ மூமென்ட் தான் இனிமே