ஐயப்ப மாலை போட்டு பொய் சொல்லக்கூடாது, துபாய் ஹோட்டலில் நடந்த உண்மைய சொல்லுங்க – அண்ணாமலைக்கு காயத்ரி கேள்வி

0
636
gayathri
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீஸனின் பிக் சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். அந்த வகையில் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராமும் ஒருவர். நடன பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஜூலிக்கு பிறகு அதிகம் வெறுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் தான். சீசன் 1 நிகழ்ச்சியில் இவர், ஓவியவிடம் அடிக்கடி வம்பிழுந்து வந்ததால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். 

-விளம்பரம்-

இந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் விட்டு வெளியேறிய பிறகு பாஜகவில் தொடர்ந்து பணிபுரிந்து வந்த காயத்ரி ரகுராம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜகவில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு பிறகு காசி சங்கம் தொடங்கி தற்போது வரையில் பாஜக விற்கு மேலாக பல கேள்விகளை எழுப்பி வருகிறார். அந்த வகையில் `துபாய் ஹோட்டலில் என்னை 150 பேருக்கு மத்தியில் அசிங்கப்படுத்தியதற்கு பாஜக தலைவர் விளக்கம் சொல்லியே ஆகவேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் காயத்ரி ரகுராம்.

- Advertisement -

இந்த நிலையில் காயத்ரி ரகுராம் தன்னுடய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அண்ணாமலை ஒரு வார் ரூம் நடத்தி வருகிறார். அங்கு நான் பிக் பாஸில் இருக்கும்போது என்னயுடைய குணத்தை விமர்சிப்பது. நான் திமுகவின் கைக்கூலியாக ஸ்லீப்பர் செல் என்று கூறுவதுமாக இருந்து வருகிறது. மேலும் பெண்களை குறித்து அவதூறாகவும், கிசுகிசு பேசுவதற்கும் அந்த ரூம் செயல்படுகிறது. ஆனால் பைக் ரேஸரான அலிஷா அப்துல்லா தன்னுடைய பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டார் அதுவும் பாஜக அலுவலகத்திலேயே.

ஆனால் நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் ஏன் என்னை கிண்டல் செய்கிறீர்கள் என்பதற்கு மட்டும் எனக்கு பதில் தெரிந்தால் போதும். இது பாஜக கட்சியின் பிரச்சனை இல்லை தலைவரான அண்ணாமலை என் மீது வைக்கப்படும் தனிப்பட்ட தாக்குதல். அண்ணாமலை தற்போது சபரிமலைக்கு மாலை அணிந்துள்ளார் எனவே அவர் பொய் சொல்லகூடாது . எனவே துபாய் ஓட்டலில் என்னை அப்போது 150 பேருக்கு மத்தியில் அவதூறாக பேசியதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் இல்லையெனில் என் மீதான குற்றசாட்டை மறுக்க வேண்டும் என்று காயத்ரி ரகுராம் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

மேலும் பெண்ணின் நேர்மை எனக்கு அரசியலை விட பெரியது. அண்ணாமலை என்னுடைய விஷியத்தில் அமைதியாக இருப்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் தவறு செய்யவில்லை அப்படி தவறு செய்திருந்தால் என் மீது நடவடிக்கை எடுக்கலாம். எனவே நீதி மற்றும் உண்மை வெளியில் வரும் வரை நான் தொடந்து போராட போகிறேன் என்று கூறியிருந்தார். மேலும் பைக் ரேசரான அலிஷா கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் எனக்கு ஏன்? கொடுக்கவில்லை.எல்லா பெண்களையும் ஒன்றாக பாருங்கள் அந்த பதிவில் கூறியிருந்தார்.

திருச்சி சூர்யா சிவா பெண் நிர்வாகியான டென்சியிடம் ஆபாசமாக பேசிய வைரலாக நிலையில் சிவாவின் மீது அலிஷா அப்துல்லாவும் பல புகார்களை தெரிவித்து வருகிறார். திருச்சி சூர்யா சிவா அண்ணாமலை அனுப்பியதாக என்னுடைய அலுவலகத்திற்கு வந்து என்னையும் என்னுடைய உடல் உறுப்புகளையும் குறித்து பேசியிருந்தார் என சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் அலிஷா அப்துலலா கூறியிருந்தார்.

Advertisement