பிகில் படத்தின் காட்சிகள் ரத்து.. அரசு அறிவிப்பால் சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்..

0
1925
Bigil
- Advertisement -

வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாக உள்ள விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி உள்ளிட்ட எந்த திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்று அரசு சார்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியிலும், பட குழுவினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-
Image result for kadambur raju
அமைச்சர் கடம்பூர் ராஜு

பண்டிகை நாட்கள் என்றால் ஏதாவது ஒரு முக்கிய நடிகரின் படம் வெளியாவது தான் பல ஆண்டுகளாக தொன்றுதொட்ட வழக்கமாக இருந்து வந்தது ஆனால் கடந்த சில காலமாக பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே வேலையில் வெளிவர ஆரம்பித்து விட்டது இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் பேட்டை மற்றும் விசுவாசம் என்ற இரண்டு மாபெரும் படங்கள் ஒரே நாளில் வெளியாக இருந்தது இந்த நிலையில் இந்த வாரம் வரை உள்ள தீபாவளி பண்டிகைக்கு விஜய்யின் பிகில் படமும் கார்த்திகை தீபம் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவதை முன்னிட்டு டிக்கெட் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது அதேபோல விஜயின் பிகில் திரைப்படத்திற்கான டிக்கட்டுகள் பல மடங்கு பணம் வைத்து விற்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது.

இதையும் பாருங்க : நான் செத்துட்டா இந்த உதவியை மட்டும் செய்யுங்க.. பரிதாப நிலையில் பறவை முனியம்மாவின் வேண்டுகோள்..

- Advertisement -

பொதுவாக ரசிகர் ஷோ எனப்படும் சிறப்பு காட்சியில் டிக்கெட்டுகள் தான் இப்படி பல மடங்கு விலை கொடுத்து ரசிகர்களால் வாங்கப்படுகிறது இந்த நிலையில் தீபாவளிக்கு வெளியாக உள்ள எந்த படத்திற்கும் திரையரங்கில் சிறப்பு காட்சிகளை ஒளிபரப்ப கூடாது என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார் சமீபத்தில் கோவில்பட்டியில் பத்திரிகையாளர்களை சந்தித்த ராஜுவிடம் படிக்கட்டுகள் அதிக பணத்திற்கு விற்கப்படுவது குறித்து கேட்கப்பட்டது இதற்கு பதிலளித்த அவர் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருக்கும் எந்த படத்திற்கும் சிறப்பு காட்சிகளை ஒளிபரப்ப தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது ஒருவேளை அதை மீறி சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பினால் திரையரங்கம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார் இதனால் பிகில் மற்றும் கைதி படத்தின் சிறப்பு காட்சிகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் இந்த இரண்டு படங்களின் வசூலில் எந்த பாதிப்பும் இருக்காது அதற்கு முக்கிய காரணமே தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை நாள் என்பதால் கண்டிப்பாக ரசிகர்களின் கூட்டம் அலைமோதி விடும் ஆனால், பொதுவாக சிறப்பு காட்சிகளில் ரசிகர்கள் பெரும்பாலானோர் படத்தை பார்த்து முடித்து விடுவார்கள் அதன் பின்னர் வரும் நாட்களில் குடும்ப ரசிகர்கள் படத்தைப் பார்ப்பதற்கு கொஞ்சம் ஏதுவாக இருக்கும். ஆனால், தற்போது சிறப்பு காட்சிகளை ரத்து செய்துள்ளதால் முதல் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை ரசிகர்களின் கூட்டம் தான் திரையரங்குகளில் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Image result for bigil and kaithi

பிகில் படத்தின் கதை திருட்டு விவகாரத்தில் ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்த நிலையில், தற்போது அடுத்த தலைவலியாக சிறப்பு காட்சிகளை ரத்துசெய்யபட்டுள்ளது, பிகில் மற்றும் கைதி ஆகிய இரண்டு படத்திற்கும் பேரிடியாக அமைந்துள்ளது அதேபோல இந்த அறிவிப்பினால் ரசிகர்களும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் இதற்கு முக்கிய காரணமே சிறப்பு காட்சிகளுக்கான டிக்கட்டுகள் பல்வேறு மாவட்டங்களில்விற்கப்பட்டுள்ள பெற்றுள்ள நிலையில் தற்போது அந்த டிக்கட்டுகளை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி வருகிறார்கள். அதேபோல சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்ப்பில் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்த ரசிகர்களுக்கும் இது பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

Advertisement