இளைய தளபதி விஜய்யின் ‘பிகில்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அறிவிப்பு தான் தற்போது சமூக வலைத்தளம் முழுக்க நிரம்பி வழிகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான ஒரு நிமடத்திலேயே பெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளது.
எப்போது இந்த படத்தின் அப்டேட் வரும் என்று காத்திருந்த ரசிங்கர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது. மேலும், ஏற்கனவே கூறியது போன்று இந்த படத்தின் தலைப்பு ‘பிகில்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பாருங்க : ரஜினி, அஜித்துடன் நடித்த நடிகை.! தற்போது பிக் பாஸ்ஸின் அடுத்த போட்டியாளர்.!
இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா மற்றும் மகன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் அதை உறுதி செய்துள்ளது. படு லோக்கலான மாஸ் கெட்டப்பில் தந்தை விஜயும், படு இளமையான ஸ்போர்ஸ்ட் மேன் கெட்டப்பில் மகன் விஜய்யும் இருக்கிறார்.
இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் பிறந்தநாள் பரிசாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதே போல விஜய்யின் பிறந்த நாளுக்காக உருவாக்கப்பட்ட ஹேர்ஸ்டைல் இந்திய அளவில் முதல் இடத்திலும் உலக அளவில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. மேலும், எந்த ஹேஸ் டேக்கள் விரைவில் ஒரு மில்லியன் பயன்பாட்டாளர்களை கொண்டு சாதனை படைக்கவும் உள்ளது.
அதேபோல பிகில் திரைப்படத்தில் ஹேஷ் டேக் இந்திய அளவில் இரண்டாவது இடத்திலும் உலக அளவில் நான்காவது இடத்திலும் இருந்து வருகிறது. மேலும், நாளை விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இரவு 12 மணிக்கு , இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாக இருக்கிறது.