குண்டம்மா காட்சிகளை நீக்க வேண்டும். புதிய சர்ச்சைக்கு ரோபோ சங்கர் மகளின் பதிலை பாருங்க.

0
577625
Robo-sankar-daughter
- Advertisement -

தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்ற பட்டத்துடன் பல ஆண்டுகளாக உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான சர்க்கார் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய், அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களை தவிர விவேக், யோகி பாபு , ஆனந்த்ராஜ், கதிர் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளதால் இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிகரித்துள்ளது.

-விளம்பரம்-

தமிழகே பல எதிர்பார்ப்புகளுடன் காத்து கொண்டிருந்த பிகில் படம்தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) வெளியாகி திரையரங்குகளில் திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது . மேலும், விஜய் ரசிகர்கள் பயங்கர ஆர்பாட்டத்திலும், உற்சாகத்திலும் தியேட்டர்களில் பட்டைய கிளப்புகிறார்கள். பெண்கள் கால்பந்தாட்ட போட்டிகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் ரெபா மோனிகா இந்துஜா ரோபோ ஷங்கரின் மகள் என்று பல்வேறு நபர்கள் நடித்துள்ளனர்.

இதையும் பாருங்க : அரசை குறை சொல்லும் மக்கள், சுஜித்தின் அம்மாவை குறை சொன்ன பிக் பாஸ் நடிகை. கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்.

- Advertisement -

மேலும், இந்த அணியில் தனது தந்தையைப் போல மிகவும் நகைச்சுவையான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரோபோ ஷங்கரின் மகள். மேலும், படத்தின் டிரெய்லரில் எங்க அம்மாவும் குண்டு எங்க அப்பாவும்குண்டு அப்புறம் நான் மட்டும் எப்படி இருப்பேன் என்று ரோபோ சங்கர் மகள் பேசிய வசனங்கள் திரைப்படத்தில் இடம் பெறவில்லை. ஆனால், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் விஜய் ரோபோ ஷங்கரின் மகளைப் பார்த்து, நீ தின்னுவதற்கு மட்டும் தான் லாயக்கு. குண்டம்மா, குண்டம்மா என்று கூறுவது போல ஒரு வசனம் இடம் பெற்று இருந்தது. ஆனால், இந்த வசனம் உறுதி செய்வதாக இருக்கிறது என்று சமூக வளைதளத்தில் ஒரு புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

ஆனால், அந்த வசனம் உருவ கேலி செய்வது போல இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே போல இந்த சர்ச்சை குறித்து ட்வீட் செய்துள்ள பிரபல விமர்சகர் பிரசாத் அட்லீ பிகில்ல குண்டம்மானு ஒரு பொண்ண சொல்லிட்டார், இது பாடி ஷேமிங் , பயங்கர தப்பு ” யார்ரா சொல்றதுன்னு பார்த்தா, மூச்சுக்கு முன்னூறு தரம் என்ன பாண்டான்னு கூப்டுர தமிழ் ட்விட்டர் போராளீஸ் . ரெம்ப போராடாதீங்க டா டேய் !! அந்த வசனத்தில் எந்த விஷமும் இல்லை என்று பதிவிட்டுள்ளார். மேலும், அவரது பதிவிற்கு கீழ் ரசிகர் ஒருவர், ரோபோ சங்கர் மகளிடம், குண்டம்மா என்று அழைப்பது குறித்து விஜய் என்ன சொன்னார் என்பதை ரோபோ சங்கரின் மகளே கூறிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

ஏற்கனவே, பிகில் ட்ரைலரில் தனது மகளை பார்த்து ரோபோ சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில். என் மகளை பார்த்து கண்ணில் கண்ணீர் வழிந்தது. என் மகளுக்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்தற்கு விஜய் சாருக்கு அட்லீ சாருக்கும் மனமார்ந்த நன்றிகள். ட்ரைலர் மிகவும் அற்புதமாக இருக்கிறது என்று பதிவிட்டிருந்தார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய், ரோபோ சங்கரிடம், உங்கள் மகளை எங்கள் மகள் போல பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியதையும் ரோபோ சங்கர் ஏற்கனவே மிகவும் நெகிழ்ச்சியாக பகிர்ந்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது.

Advertisement