எல்லாம் பரவால்லனு பாத்தா, கடைசில பிகில் படத்தின் இந்த கிளைமேக்ஸ் சீனே காப்பியா ?வீடீயோவை பாருங்க.

0
148980
bigil
- Advertisement -

இளைய தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திகில் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை செய்திருந்தது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் விஜய் என்ற மாபெரும் நடிகரின் படம் என்பதால் இந்த படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. பெண்கள் கால்பந்தாட்ட போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் நயன்தாரா ,யோகிபாபு, இந்திரா, இந்துஜா,ரெபா மோனிகா, ஆனந்தராஜ், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்து இருந்தனர்.

-விளம்பரம்-

இந்தப் படத்தில் நடிகர் விஜய் மைக்கேல் மற்றும் ராயப்பன் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேலும் இந்த படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் வந்த ராயப்பன் என்ற கதாபாத்திரத்தை வைத்து மட்டும் இயக்குனர் அட்லி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதே போல இந்த படத்தில் இடம்பெற்ற பல்வேறு காட்சிகள் பல்வேறு படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்று பல்வேறு வீடியோக்களை பகிர்ந்த வண்ணம் இருக்கின்றனர்.

இதையும் பாருங்க : திருமணத்திற்கு பின் சமீரா நடிப்பதை நிறுத்துவிட்டாரா ? விளக்கமளித்த பகல் நிலவு அன்வர்.

- Advertisement -

இந்த படத்தில் இந்துஜா விஜய்யிடம் ஒரு காட்சியில் குட்மார்னிங் கோச் என்று சொன்னதும் அதற்கு விஜய் கேட்கவில்லை என்று கூறும் வசனம் ஏற்கனவே ஷாருக் கான் நடித்த சக்தே இந்தியா என்ற ஹிந்தி படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ வெளியாகி இருந்தது. இதைத்தொடர்ந்து பிகில் படத்தில் இடம்பெற்ற பல்வேறு வீடியோக்களையும் வெளியிட்டு அதேபோன்று இருக்கும் வேறு ஒரு படத்தின் வீடியோவையும் வெளியிட்டு வந்தனர். இதனால் அட்லீ மற்ற படங்களை போல இந்த படத்தையும் காப்பி அடித்து எடுத்துள்ளார் என்று பலரும் ட்ரோல் செய்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெற்ற காட்சி ஒன்றும் ஹாலிவுட் படத்திலிருந்து அட்லீ காப்பி அடித்து உள்ளார் என்று ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா. சரியாக விளையாடவில்லை என்று விஜய் அவரது உருவத்தை கேலி செய்து அவரை வெறுப்பேற்றுவார். இந்த காட்சியை போன்று இருக்கும் வேறு ஒரு படத்தில் இடம்பெற்ற காட்சியின் வீடியோ ஒன்றை தற்போது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்

-விளம்பரம்-

இது புறம் இருக்க இந்த படம் வெளியாகும் முன்பே இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குநர் பன்னீர்செல்வம் என்கிற செல்வா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதே போல துணை இயக்குனர் செல்வா என்பவரும் இதே படத்தின் கதையை தயார் செய்து எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்ததாகவும் சில தயாரிப்பு நிறுவனங்களிடம் கதைச் சொல்லி இருந்ததாகவும் அதைத் திருடி பிகில் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் படத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் கூறியிருந்தார் எனபதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த தடையை சமீபத்தில் நீதி மன்றம் நீக்கி இருந்தது.

Advertisement