பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு வராத நயன் குறித்து சற்று முன் தயாரிப்பாளர் போட்ட ட்வீட்.!

0
21099
archana-kalpathy

தென்னிந்திய சினிமா திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் இன்றைய இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்கிறார். மேலும், தென்னிந்திய திரை உலகிலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் என்று சொல்லப்பட்டு வருகின்றன. சில வருடங்களாகவே நயன்தாரா நடிப்பில் திரைக்கு வெளிவந்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட்டாக இருந்தது. அதை தொடர்ந்து தளபதி விஜய்யின் 63 வது படமான பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.மேலும், பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சிறப்பாக முடிவடைந்தது.பொதுவாகவே நயன்தாரா தான் நடிக்கும் படத்தின் புரமோஷனுக்கும் , எந்த ஒரு விழாவிற்கும் வர மாட்டார் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Image result for bigil nayanthara

பிரபலமான நடிகர், பிரபலமான இயக்குனர், பெரிய கம்பெனி ஆக கூட இருந்தாலும் புரமோஷனுக்கு வந்து கலந்துகொள்ளவும் மாட்டார்.அவர் எந்த ஒரு பேட்டியும் கூட தருவதில்லை.அதுவும் அபூர்வமாக ‘பூக்கும் காளான்’ போல அவருக்கே தோன்றினால் மட்டும் டிவியில் கலந்து கொண்டு பேட்டி அளிப்பார். நயன்தாராவை படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யும்போதே அவர் கண்டிப்புடன் சொல்லிடுவார். என்னை எந்த ஒரு புரமோஷனுக்கு, விழாவிற்கு வற்புறுத்தக்கூடாது என்றும் , இந்த கண்டிஷனுக்கு சரி என்றால் தான் அவர் படத்தில் நடிக்க சம்மதிப்பார் என்று திரையுலகத்தில் பேசப்பட்டு வருகின்றன.

- Advertisement -

இதையும் பாருங்க : ட்விட்டரில் தளபதியின் பிகிலை முந்திச் செல்லும் பிக்பாஸ் கவின்.! காரணம் இது தான்.!

இருப்பினும் ,பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நயன்தாரா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. அதை தொடர்ந்து,வரும் ஞாயிறு கிழமை 22ம் தேதி அன்று ஹைதராபாத்தில் “சைரா ” படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.இந்த “சைரா ” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நயன்தாரா கலந்து கொள்வாரா? என பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

-விளம்பரம்-

தற்போது பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சன் தொலைக்காட்சில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் நயன்தாரா குறித்து ‘பிகில் ‘ படத்தின் தயரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நயன்தாரா குறித்து ட்வீட் போட்டுள்ளார். அதில், ஏஜிஎட் குடும்பத்தில் ஏற்கனவே இனைந்த நயன்தாராவிற்கு தனிப்பட்ட நன்றிகள். அனைத்திற்க்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement