காலா,பேட்ட கெட்டப்பை மிஞ்சிய ரஜினி.! வைரலாகும் ‘ரஜினி 166’ படத்தின் பர்ஸ்ட் லுக்.!

0
770
Rajini-166

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் செய்திகள் பல நாட்களாக அடிபட்டு வரும் நிலையில் இன்னும் இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருக்கிறது. 

இந்த படம் இந்திய அளவில் உள்ள அரசியல் பிரச்சினையை மையப்படுத்தியே இருக்கும் என்று பேசப்பட்டது. ஆனால், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற முருகதாஸ் இந்த படம் தனது முந்தைய படமான ‘சர்கார்’ போன்று அரசியல் சம்மந்தபட்ட கதையாக இருக்காது என்று விளக்கமளித்தார்.

இதையும் படியுங்க : 27 வருடங்களுக்கு பின் மீண்டும் இப்படி ஒரு ரோலில் ரஜினி.!எக்ஸ்க்லுசிவ் அப்டேட்.! 

- Advertisement -

மேலும், இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் படத்தில் இடம்பெறும் அம்சங்கள் அனைத்தும் இருக்கும் என்றும் முருகதாஸ் என்று கூறியிருந்தார். ஆனால், படத்தில் பணிபுரியும் கலைஞர்கள் பற்றி எந்த ஒரு தகவலையும் அவர் கூறவில்லை. 

இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் ‘ரஜினியின் 166’ என்ற போஸ்டரை உருவாக்கி அதனை இணையதளங்களில் வைரலாக்கியுள்ளார். அச்சுஅசலாக அதிகாரபூர்வ போஸ்டர் போலவே உள்ள இந்த போஸ்டருக்கு ரஜினி ரசிகர்கள்  பெரும் வரவேற்பை அளித்துள்ளனர். கண்களில் கருப்புக்கண்ணாடி, முகத்தில் வெள்ளைத்தாடி, வாயில் பீடியுடன் ரஜினியின் அட்டகாசமான ஸ்டைலில் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisement