அஜித், சூர்யா படம் இல்லை.! சர்காருக்கு போட்டியாக படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யட்டா.! சவால் விட்ட நடிகர்.!

0
253
Ajirth-Vijay

பெரிய ஹீரோக்கள் படங்கள் அனைத்தும் பெரும்பாலும் பொங்கல்,தீபாவளி போன்ற பண்டிகை தினங்கள் அன்று தான் வெளியாகும். அதனால் அந்த நாட்களில் சிறிய ஹீரோக்களின் படங்களை வெளியிடுவதை யோசிப்பார்கள். ஆனால், தனது முதல் படத்தையே இளையதளபதி விஜய் நடித்துள்ள “சர்க்கார்” படத்திற்கு போட்டியாக வெளியிட திட்டமிட்டுள்ளார் ஆர். கே. சுரேஷ்.

billa_pandi

இயக்குனர் பாலா இயக்கிய “தாரதப்பட்டை ” என்ற படத்தில் வில்லன் நடிகராக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமானவர் ஆர் கே சுரேஷ். திரைபட வினியோகிஸ்த்தர் மற்றும் தயரிப்பாளரான இவர், தற்போது இயக்குனர் சரவண சக்தி இயக்கத்தில் “பில்லா பாண்டி” என்னும் படத்தில் ஹீரோவாக அவதாரமெடுத்துள்ளார். இந்த படத்தில் இந்துஜா யோகி பாபு உள்ளிட்டோர். மேலும் , இதில் ஆர் கே சுரேஷ் ஒரு அஜித் ரசிகனாக இல்லை இல்லை அஜித் வெறியனாக நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் வெளியிட்டு அறிவிப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வதிவிட்டிருந்த ஆர் கே சுரேஷ், நண்பர்களே பில்லா பாண்டி படத்தை தீபாவளி அன்று வெளியிடலாம் என்று நினைக்கிறேன்.உங்கள் கருத்து என்ன என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கன்வே தீபாவளிக்கு நடிகர் விஜயின் சர்க்கார் படம் சோலோவாக வெளியாக இருந்தது. தீபாவளியன்று வெளியாக இருந்த சூர்யாவின் “என் ஜி கே” படமும் தள்ளி போய்யுள்ளது.ஆனால், ஹீரோவாக நடித்துள்ள தனது முதல் படத்தையே விஜய் படத்திற்கு போட்டியாக வெளியிட முடிவு செய்துள்ள ஆர் கே சுரேஷ்ஷின் தைரியம் மிகவும் பாராட்டக் கூடியது தான். தரமான படம் என்றால் ரசிகர்களின் ஆதரவு கண்டிப்பாக இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.