முன்னாள் தமிழக பாஜக கட்சியின் தமிழ் வளர்ச்சி துறையின் தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் அண்மையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பாஜகவில் இருந்து வெளியேறிய நிலையில். காயத்ரி ரகுராம் கூறியது குறித்து தற்போது பாஜக தேசிய செயற்குழு நிர்வாகியான நடிகை குஷ்பு தன்னுடைய கருத்தை சமீபாத்தில் நடந்த விழா ஒன்றில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் திருச்சி சூர்யா – டெய்சி ஆடியோ விவகாரம் பெரும் சர்ச்சையானதை அடுத்து அண்ணாமலை மீது தொடர் குற்ற சாட்டுகளை தெரிவித்து வந்தார் காயத்ரி ரகுராம்.
இந்நிலையில் காயத்ரி ரகுராம் பாஜகவை விட்டு அண்மையில் இடைநீக்கம் செய்யப்பட்டார். அதற்கு பிறகு தொடர்ந்து அண்ணாமலை குறித்து பல விதமான குற்றச்சாட்டுகளையும், தன்னை அவமானப்படுத்தியதாகவும் கூறிவந்த காயத்ரி கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று முழுவதுமாக வெளியேறினார். அதோடு அண்ணாமலை என்னுடன் விவாதிக்க தயாரா? என்று ட்விட்டரில் சவால் விட்டு பதிவு ஒன்றை போட்டிருந்தார்.
இந்த நிலையில் கோவை அருகே உள்ள வெள்ளலூர் நெடுஞ்சாலை அருகே “நம்ம ஊர் பொங்கல் திருவிழா” என்று பாஜக சார்பில் நிகழ்ச்சி ஓன்று நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பாஜகவின் தெற்கு மாவட்ட தலைவரான வசந்த்ராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட செயற்குழு தலைவரான நடிகை குஷ்பு அங்குள்ள மக்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடினார். பின்னர் கும்மியாட்டதில் குஷ்புவும் கலந்து கொண்டு கும்மி அடித்தார்.
அதற்கு பிறகு ரேக்ளா போட்டி நடந்தது, அதனை கொடியசைத்து குஷ்பு துவக்கி வைத்தார். அதற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்புவிடம் தமிழ் நாட்டு அரசின் பொங்கல் பரிசு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் `தமிழக அரசின் பொங்கல் பரிசு வெட்கக்கேடானது. ஒரு கரும்பும் பிட்சை போல 1000 ருபாய் பணமும் தருகிறார்கள். இதனை கண்டிப்பாக சுயமரியாதை உள்ள மக்கள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழக கலாச்சரத்தை பாதுகாப்பதாக கூறும் திமுக இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ள கூடாது என்று கூறினார்.
பின்னர் காயத்ரி ரகுராம் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி வெளியேறியதற்கும், பாஜக தலைவரான அண்ணாமலை குறித்தும் காயத்ரி ரகுராம் கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் `பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அவர் ஒருவர் மட்டும்தான் சொல்கிறார். பாஜகவில் இருந்து எல்லா பெண்களும் செல்லவில்லை. நானும் பாஜகவில் தான் இருக்கிறேன். அதோடு என்னை திமுகவினர் அவதூறாக பேசிய போது கூட தலைவர் அண்ணாமலை அதற்க்காக ஆர்ப்பாட்டம் நடத்தினார் என்று கூறினார் நடிகை குஷ்பு