இயக்குனர் லிங்குசாமி வீட்டில் நேர்ந்த இறப்பு – காலமானார் திருப்பதி மளிகை உரிமையாளர்

0
262
- Advertisement -

இயக்குனர் லிங்குசாமியின் சகோதரர் காலமாகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் லிங்குசாமி. இவர் திருப்பதி புரோடக்சன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் முதலில் இயக்குனர் விக்ரமனின் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.பிறகு 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஆனந்தம் என்ற திரைப்படத்தை இயக்கி முதன் முதலாக தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். மேலும், இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. கடைசியாக இவர் விஷாலின் சண்டக்கோழி 2 என்ற படத்தை இயக்கி இருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. அதன் பின் கடந்த ஆண்டு இயக்குனர் லிங்குசாமி அவர்கள் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி வைத்து ‘தி வாரியர்’ படத்தை இயக்கினார்.

- Advertisement -

லிங்குசாமி திரைப்பயணம்:

இப்படத்தில் ராம் பொத்தினேனி முதல் முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். ஏற்கெனவே, தமிழில் லிங்குசாமி இயக்கிய ‘வேட்டை’ படமும் காவல்துறை கதைக்களத்தைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். ஆதி வில்லனாகவும், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டது. தமிழில் படம் சரியாக ஓடவில்லை என்றாலும் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்.

-விளம்பரம்-

லிங்குசாமி குடும்பம் :

இதை தொடர்ந்து லிங்குசாமியின் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. இந்த நிலையில் லிங்குசாமி வீட்டில் துக்க சம்பவம் நடந்து இருக்கிறது. அதாவது, இயக்குனர் லிங்குசாமிக்கு ராதாகிருஷ்ணன், கேசவன் என்ற இரண்டு அண்ணன்கள், சுபாஷ் சந்திர போஸ் என்ற தம்பியும் இருக்கிறார்கள். இதில் இரண்டாவது அண்ணன் கேசவன் தான் இன்று காலை மாரடைப்பினால் இறந்திருக்கிறார்.

லிங்குசாமி அண்ணன் இறப்பு:

இவர் கும்பகோணம் அருகே உள்ள குடவாசலில் திருப்பதி மளிகை கடை ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். பின் சமீப காலமாக இவர் சென்னையில் அண்ணனுடன் இருந்து வந்தார். அதனை தொடர்ந்து இவர் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தையும் சகோதரர்களுடன் சேர்ந்து கவனித்து வந்தார். இப்படி இருக்கும் நிலையில் இன்று காலை மாரடைப்பு காரணமாக கேசவன் இறந்திருக்கிறார். இவருடைய உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

கேசவன் மகன்:

தற்போது அவருக்கு 60 வயது ஆகிறது மேலும், லிங்குசாமியின் அண்ணன் கேசவன் மறைவிற்கு கோலிவுட் பிரபலங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அதோடு கேசவனின் மகன் வினோத். இவர் கோலி சோடா 2 படத்தில் 3 நாயர்களில் ஒருவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் லிங்குசாமி தயாரித்த நான் தான் சிவா என்ற படத்தில் கதாநாயகனாகவும் அவர் நடித்திருக்கிறார். அந்த படம் ரிலீசுக்கு தற்போது தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement