நடராஜனின் ஜாதிப்பெயரை குறிப்பிட்டு பிரபல Bjp ஆதரவாளர் போட்ட ட்வீட்.

0
4256
natti

சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்திய தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் நடராஜனின் ஜாதிப் பெயரை குறிப்பிட்டு பிஜேபியை சேர்ந்த முக்கிய பிரபலம் போட்ட டீவீட்டால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி கான்பெர்ரா மைதானத்தில் நேற்று (டிசம்பர் 2)நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சைனிக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் இடம்பெற்று இருந்தது தமிழக ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த போட்டியில் பங்கேற்றதன் மூலம் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் நடராஜன் பங்கேற்றார். ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் வெளியான ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் இந்திய அணியில் பேக்கப் பபவுலராக வந்த நடராஜன் டி20 தொடரில் இருந்து வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக வெளியேறியதால் அவருக்கு பதிலாக அணியில் இடம்பெற்றார். சமீபத்தில் சைனிக்கு முது வலி ஏற்பட்டதன் காரணமாக அவருக்கும் பதிலாக நடராஜன் இடம்பெற்று இருந்தார்.

- Advertisement -

கடந்த 2020ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி நடராஜன் 16 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அது மட்டுமின்றி அவரது யார்க்கர் வீசும் திறன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதனால் இவரை யார்க்கர் கிங் என்றும் அழைத்தனர். நேற்று நடைபெற்ற போட்டியில் 10 ஓவர்கள் வீசிய நடராஜன் 70 ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதுமட்டுமின்றி ஆஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டை நடராஜனை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய நடராஜனுக்கு தற்போது உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதமைச்சர் எடப்பாடி பழனி சாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அதில் ‘இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன்’ என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், பல்வேறு சினிமா பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் ட்விட்டரில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், பிஜேபி கட்சியை சேர்ந்தவர் என்று கூறப்படும் கிஷோர், நடராஜனின் ஜாதி பெயரை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து பதிவிட்ட அவர் ‘வீர வன்னியரான நடராஜன் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட் சாதனை’என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த பலரும் கிஷோர் மீது பல விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

Advertisement