மாதம் செலவுக்கு மட்டுமே இவ்வளவு வேண்டும் – மணிமேகலை சொன்ன கணக்கு. ஆனா, யூடுயூப் வருமானம் மட்டும் எவ்ளோ தெரியுமா?

0
316
Manimegalai
- Advertisement -

மணிமேகலையின் சொத்து மதிப்பு குறித்த விவரம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக வேலை பார்த்து இருந்தவர் மணிமேகலை. அதன் பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனை தொடர்ந்து மணிமேகலை தனியார் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார். இதனால் மணிமேகலை மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதனிடையே மணிமேகலை- உசேன் நீண்ட வருடமாக காதலித்து வந்தார்கள். ஆனால், இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிக்கவில்லை. பின் பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மேலும், மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணி புரிந்து வருகிறார்.

- Advertisement -

மணிமேகலை-உசேன் திருமணம்:

அதோடு ஹுசைனின் மதத்திற்கு மணிமேகலை மாறாததால் ஹுசைன் வீட்டிலும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. சமீபத்தில் தான் இவர்களை குடும்பத்தினர் சேர்த்துக் கொண்டனர். மணிமேகலை திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் பிரேக் எடுத்து கொண்டாலும் தற்போது இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும், இவர் Vjவாக இதுவரை 2400க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

மணிமேகலையின் 12 ஆண்டு சாதனை:

லைவ் நிகழ்ச்சிகள், 120 க்கும் மேற்பட்ட பிரபலங்களின் பேட்டி, 250க்கும் மேற்பட்ட பொது நிகழ்ச்சிகள், 100க்கும் மேற்ப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்று 12 ஆண்டுகளில் செய்து இருப்பதாகவும் சமீபத்தில் மணிமேகலை கூறியிருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். தற்போது இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

மணிமேகலையின் வீடு,கார்,பைக்:

தற்போது இவர் விஜய் டிவியிலேயே செட்டில்ஆகி விட்டார் ஏன்று சொல்லலாம். அதே போல இந்த தம்பதி யூடுயூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றனர். இதனால் இவர்களை லட்சக்கணக்காக பேர் பாலோ செய்கிறார்கள். அது மட்டுமில்லாமல் சமீப காலமாகவே மணிமேகலை பல விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கி இருக்கிறார். அதுவும் bmw g 310 gs rallye edition என்ற பைக்கை வாங்கி இருக்கின்றனர். இதன் விலை 3,40,000 இருக்கும். ஏற்கனவே Bmw கார் வைத்து இருக்கும்.

மணிமேகலையின் சொத்து மதிப்பு:

மேலும், சில மாதங்களுக்கு முன்பு இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி அதற்கு HM லேண்ட் என பெயர் வைத்து இருக்கிறார்கள். அதில் தற்போது வீடு கட்டுவதற்கான பணிகள் சென்று கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் மணிமேகலை தனது மாத செலவுக்கு மட்டும் 40 முதல் 45 ஆயிரம் முதல் செல்வவதாக கூறியுள்ளார். இப்படி ஒரு நிலையில் இவரது யூடுயூப் வருமானம் மட்டும் கிட்டத்தட்ட 59 ஆயிரம் மாதம் வருமானம் வருவதாக பிரபலங்களின் யூடுயூப் வருமானங்களை வெளியிடும் யூடுயூப் பிரபலம் ராபி தெரிவித்து இருக்கிறார்.

Advertisement