முதல்வர் வருகையையொட்டி தவறான கருத்து பரப்பிய பாஜக ஒன்றிய தலைவர் காவல் துறையால் கைது.

0
836
- Advertisement -

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ராமநாதபுரம் பயணத்தை குறித்து தவறான தகவல்களை பதிவு செய்த பரமகுடியை சேர்ந்த பாஜக ஒன்றிய தலைவர் முத்துலிங்கத்தை அவரது வீட்டில் காவல்துறை அவரை கைது செய்தது. இன்று முதல்வர் மூன்று நாள் பயணமாக மதுரை சென்றுள்ளார். இன்று இரவு 7 மணிக்கு முனிச்சாலை பகுதியில் பாடகர் சவுந்திரராஜன் சிலையை திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் தவறான கருத்து பதிவிட்டதால் முத்துலிங்கம் கைது செய்யப்பட்டார்.

-விளம்பரம்-

முதல்வர் வருகை:

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மூன்று நாள் பயணமாக  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் இதற்காக அவர் நேற்று மாலை சென்னையில் இருந்து அடைந்தார் தொடர்ந்து முன் சாலையில் உள்ள பழைய மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றார் மறைந்த பழம்பெறும் பாடகர் டி எம் சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவை ஒட்டி சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்ட ஏழு அடி உயர வெங்கல சிலையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

- Advertisement -

தனது தந்தைக்கு சிலை திறக்கப்பட்ட நாள் வாழ்நாளில் பொன்னாள் என்று டி எம் எஸ் மகன் பால்ராஜ் மற்றும் கொள்ளுப்பேத்தி ஒரு ரூபினி மகிழ்ச்சி தெரிவித்தனர். மதுரையில் தங்கள் கண் முன் டி எம் எஸ் ஐ சிலையாக உருவகப்படுத்தியது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக அவரது ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்தனர். முதலமைச்சர் கார் மூலம் ராமநாதபுரம் புறப்படுகிறார் ராமநாதபுரம் செல்லும் வழியில் பரமக்குடியில் நண்பகல் 12 30 மணியளவில் 100 அடி உயர கம்பத்தில் திமுக கொடியை.

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் தங்கும் விடுதிக்கு வரும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாலை 6 மணி அளவில் ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டினத்தில். திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார் அப்போது நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை வழங்க உள்ளார் தொடர்ந்து நாளை ராமேஸ்வரத்தில் நடைபெறும் மீனவர் சங்க மாநாட்டிலும் முதலமைச்சர் கலந்து கொள்கிறார்.  

-விளம்பரம்-

தவறான கருத்து பரப்பிய ஒன்றிய தலைவர்:

முதல்வரின் வருகையையொட்டி ராமேஸ்வரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் ராமேஸ்வரத்திற்கு வருவதால் பாஜக ஒன்றிய தலைவர் முத்துலிங்கம்  இணையத்தில் முதல்வர் குறித்து தவறான கருத்துகளை பதிவிட்டதால் பாஜக ஒன்றிய தலைவர் முத்துலிங்கத்தை காவல்துறை அவரை அவரது விட்டில் வைத்து கைது செய்தது.     

Advertisement