பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய குழந்தைகளின் காமெடி – ஜீ தமிழ் சேனலுக்கு பா ஜ கவினர் கண்டனம். இந்த வீடியோ தான் காரணம்.

0
586
modi
- Advertisement -

சின்னத்திரையில் சீரியல்கள் மட்டுமில்லாமல் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அதிலும் கொரோனா தொடங்கிய காலத்திலிருந்து புதுப்புது வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால் மக்கள் அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள். மேலும், ஒவ்வொரு சேனலும் தன்னுடைய சேனலின் டிஆர்பி ரேடிங்காக புத்தம் புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. பெரும்பாலும் சேனல்களில் அதிகம் பாடல்கள் பாடுவது, நடனம் ஆடுவது, காமெடி நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சியை என பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

ஜீ தமிழ் ஜூனியர் சூப்பர் ஸ்டார் :

அதிலும் சமீப காலமாகவே தொலைக்காட்சிகளில் குழந்தைகள் வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார்கள். இது எல்லா சேனல்களிலும் நடந்து வருகிறது. இந்த நிலையில் பிரபல சேனலில் நடந்த காமெடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை கேலி, கிண்டல் செய்யும் விதமாக நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள் என்று பாஜக தரப்பில் இருந்து பெரும் கண்டனங்கள் எழுந்து இருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்’. குழந்தைகள் காமெடி நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது.

- Advertisement -

மோடியை பற்றி கேலி :

மூன்று சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியில் புலிகேசி மன்னர் போன்ற ஒரு வேடத்தில் ஒரு குழந்தையும், மங்குனி அமைச்சர் வேடத்தில் ஒரு குழந்தையும் நடித்திருந்தார்கள். அந்த இரண்டு குழந்தைகளும் பிரதமர் மோடி பற்றியும், கருப்பு பணம் நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது உள்ளிட்ட பல நிகழ்வுகளை விமர்சித்து காமெடியாக பேசி இருந்தார்கள்.

பா ஜ கவினர் கண்டனம் :

இப்படி இந்த குழந்தைகள் பேசிய காட்சி நேற்றிலிருந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்நிலையில் மாநில பாஜக ஐடி பிரிவு தலைவர் சி.டி.நிர்மல் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த ஜனவரி 15 ஆம் தேதி ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பானது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவர்கள் பிரதமர் மோடியை பகடி செய்தனர். அவர் மீது மோசமான விமர்சனங்களை முன்வைத்தனர்.

-விளம்பரம்-

பொது மன்னிப்பு கோர வேண்டும் :

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள், அவரின் ஆடைகள், தனியார்மயமாக்குதல் கொள்கை ஆகியனவற்றை விமர்சித்து சிறுவர்கள் பேசி நடித்தனர். 10 வயதே நிரம்பிய அந்த சிறாருக்கு நிச்சயமாக அவர்கள் பேசியதன் அர்த்தம் தெரிந்திருக்காது. இது தவறான செய்தியைக் கடத்தியுள்ளது.இந்த நிகழ்ச்சியின் குறிப்பிட்ட அந்த அத்தியாயத்தைசேனல்திரும்பப் பெற வேண்டும். அத்துடன் பொது மன்னிப்பும் கோர வேண்டும். சேனல், நிகழ்ச்சி தயாரிப்பாளர், நிகழ்ச்சியின் நீதிபதிகள் என அனைவருமே தண்டிக்கப்பட வேண்டும்.

அண்ணாமலை, குஷ்பூ, காயத்திரி கண்டனம் :

குழந்தைகளைஅரசியல்கொள்கைகளைப் பரப்புவதற்காகப் பயன்படுத்தக்கூடாது. எங்களது மவுனம் நாங்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொள்வதாகக் கருதப்படக்கூடாது” என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழ் நாடு பா ஜ தலைவர் அண்ணாமலை, நடிகை குஷ்பூ, நடிகை காயத்திரி ரகுராம் என்று பலர் இந்த விவகாரத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement