வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த ஜாபரின் உருவத்தை கேலி செய்த ப்ளூ சட்டை – வலுக்கும் கண்டனங்கள்.

0
533
jaffer
- Advertisement -

வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த ஜாபரை தன்னுடைய விமர்சனத்தில் ப்ளூ சட்டை உருவக்கேலி செய்து இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும், கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து இருக்கிறார். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

ஆனால், இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து தான் வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். மேலும், தன்னைத்தானே விமர்சகர் என்று சொல்லிக்கொண்டு திரைப்படங்களை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார். படத்தில் இருக்கும் நிறைகளை பேசுவதைவிட குறைகளை பேசுவது தான் அதிகம். இதனால் இவரை ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி இருக்கின்றன.

- Advertisement -

ப்ளூ சட்டையும் உருவக் கேலிகளும் :

அதிலும் அஜித்தின் வலிமை படத்தை குறித்து மட்டுமல்லாது அஜித்தின் உருவத்தை கேலி செய்து தாறுமாறாக பேசி இருந்ததால் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் கொந்தளித்து ப்ளூ சட்டை மாறனை திட்டி இருந்தார்கள். இருந்தும் தனது பாணியை மாற்றாமல் இருந்து வரும் மாறன் சமீபத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ள ஜாபரை உருவக் கேலி செய்து இருக்கிறார்.

ராவுத்தராக மிரட்டி இருக்கும் ஜாபர் :

பாவக்கதைகள் வெப் தொடரில் நரிக்குட்டி கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஜாபர் பின்னர் விக்ரம் படத்தில் ‘கட்டிங் பளையர்’ ரோலில் அசத்தி இருந்தார். இதை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தில் ராவுத்தர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார் ஜாபர். இப்படி ஒரு நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் விமர்சனத்தில் படத்தை வழக்கம் போல கழுவி ஊற்றிய மாறன், ஜாபர் குறித்து உருவக் கேலி செய்து இருக்கிறார்.

-விளம்பரம்-

ஜாபர் உருவத்தை கேலி செய்த ப்ளூ சட்டை :

ஜாபர் குறித்து பேசி இருக்கும் அவர் ‘ஹீரோ ஒரு பெரிய டானாக மாறி வருகிறார் என்றதும் அவரை கொல்ல ஒரு பெரிய பீசை ரெடி செய்கிறார்கள். அது யார் என்றால் விக்ரம் படத்தில் குட்டியாக லில்லி புட்டு போல மினி வாட்டர் போல வருவாரே அவரை ஒரு கோடி ரூபாய் கொடுத்து ஹீரோவை கொல்ல ஏற்பாடு செய்கிறார்கள்.’ என்று படு மோசமாக ஜாபரின் உருவத்தை கேலி செய்து இருக்கிறார்.

Plip Plip சர்ச்சை :

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வர ப்ளூ சட்டை மாறனுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விக்ரம் படம் வெளியான போது roast என்ற பெயரில் ‘Plip Plip’ யூயூப் சேனல் படத்தை கேலி செய்த்தோடு மட்டுமல்லாமல் கமலின் நடிப்பையும் கேலி செய்து இருக்கின்றனர். பொதுவாக இவர்கள் ரோஸ்ட்டில் இருக்கும் காமெடிகள் ஒரு சில ரசிகர்களுக்கு பிடிக்கும் தான். ஆனால், இந்த படத்தின் ரோஸ்ட் வீடியோவை கண்டு நெட்டிசன்களே இவர்களை ரோஸ்ட் செய்து வந்தனர்.

அன்று லோகேஷ் கொடுத்த பதிலடி :

இதற்கு பதிலடி கொடுத்த லோகேஷ் கனகராஜ் ‘ என் படத்தில் நடித்த ஜாபர் எல்லாம் அவன் வீட்டில் அவன் ஹீரோ. அவன் என்னை நம்பி தான் என் படத்தில நடிக்க வந்தான். ஜாபரின் நடிப்பை கேலி செய்யலாம் ஆனால், அவரின் உடலை கேவலமாக பேசுவது எனக்கும் துளியும் விருப்பம் இல்லை. நாம் எதை விதைக்கிறோமே அதை தான் அறுப்போம் என்று நம்புவன் நான்’ என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement