போக்சோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ‘கிறிஸ்துதாஸ்’ – பெயரை வைத்து வரும் விமர்சனங்களுக்கு இளையராசா பெயரை உதாரணம் காட்டி ஜேம்ஸ் வசந்தன்விளக்கம்.

0
335
james
- Advertisement -

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் அக்கவுண்டன்சி பிரிவில் 11-ம் மற்றும் 12-ம் வகுப்பிற்கு, பாடம் நடத்தும் ஆசிரியர் கிறிஸ்து தாஸ் என்பவர் வகுப்பறையில் மாணவ, மாணவிகளுக்கு ஆபாச வகுப்பு நடத்தி வந்ததாக மாணவர்கள் மத்தியில் புகார் எழுந்தது. இதை தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது போக்சோ உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு கைது செய்தனர். இது ஒருபுறம் இருக்க கிறிஸ்து தாஸ் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது பெயரில் இருக்கும் ‘கிறிஸ்து’ என்பதை குறிப்பிட்டு ஒரு சிலர் கிறிஸ்துவர்களை விமர்சித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இதற்கு விளக்கமளிக்கும் வகையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

- Advertisement -

பய புள்ளங்களுக்கு எல்லாத்தையும் விளக்கிச் சொல்லவேண்டி இருக்கு.

போக்ஸோவில் கைதான அந்த ஆசிரியர் பெயர் ‘கிறிஸ்து தாஸ்’ என்பது எவ்வளவு உறுத்துகிறது என்பதுதான் பார்வை. அதைத் தாண்டி அதில் ஒன்றும் இல்லை. சில அதி புத்திசாலிகள் ரொம்ப சிந்திக்கிறார்கள்!

-விளம்பரம்-

‘இயேசு’ என்று பெயர் வைத்திருந்தால் ஒன்றும் தவறாகத் தெரியாது. லத்தீன் நாடுகளில் வீட்டுக்கு ஒரு இயேசு இருப்பார். ரொம்பப் பரவலாக வைக்கப்படும் பெயர். அதைத்தான் கிறிஸ்து குழந்தையாகப் பிறந்தபோதும் வைத்தார்கள்.

ஆனால், ‘கிறிஸ்து’ என்பவர் ஒருவரே. வேறு யாரும் எங்கும் கிடையாது. அந்தப் பெயரை வைத்துக்கொண்டு இப்படி காரியங்களில் சிக்கும்போது வேதனையக இருக்கிறது என்பதுதான் பகிர்வு.

அந்தப் பெற்றோருக்கு கொஞ்சமும் புரிதல் இல்லாமல் இந்தப் பெயரை அவருக்கு வைத்திருக்கிறார்கள். உங்களுக்கு எப்படித் தெரியும் பின்னாளில் யார் எப்படி இருப்பார்கள் என்று?

நானும் ஒரு பெரிய இசைக்கலைஞரும் ஒருமுறை மதுரை அரசடியில் உள்ள எளிமையான ஒரு உணவகத்துக்குச் சென்றோம். நாங்கள் ஒரு மேசை முன்பு அமர்ந்தவுடன் கல்லாவிலிருந்த முதலாளி உள்ளே பார்த்து சத்தமாக,

“டேய்.. இளையராஜா.. வந்து மேசையை க்லீன் பண்ணுடா” என்று கத்த எங்களுக்கு அடிவயிற்றில் பக்கென்றது.

அந்தப் பையன் வந்தவுடன் அவனிடம் மெதுவாக “உம் பேர் என்னப்பா?” என்றேன்.

“இளையராசா” என்றான்.

அவன் பெற்றோர் ராஜா அபிமானியாக இருந்ததால் இதை அவனுக்குச் சூட்டியிருக்கிறார்கள் என்று விளங்கிக்கொண்டோம். ஆனாலும் வலித்தது!

அதே உணர்வுதான்!

Advertisement