விஜய் தேனூட்டி பெயர் வைத்த இந்த குழந்தை யார் தெரியுமா ? இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

0
34769
Vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மாஸ் ஹீரோவாக கலக்கி கொண்டு இருப்பவர் தளபதி விஜய். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த “பிகில்” படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. தளபதி விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அங்கங்கே விஜய் ரசிகர்கள் நற்பணி மன்றங்களும் தொடங்கியுள்ளார்கள். அந்த வகையில் சேலம் விஜய் மக்கள் இயக்க தலைவர் பொண்ணுக்கு தளபதி விஜய் தான் பெயர் வைத்து இருந்தார் .

-விளம்பரம்-

தற்போது இந்த போட்டோ சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. சேலம் விஜய் மக்கள் இயக்க தலைவர் தமிழன் பார்த்திபன், விஜய்யின் ஜில்லா படத்தில் கூட நடித்துள்ளார். பொண்ணுக்கு தளபதி விஜய் அவர்கள் தான் தேன் ஊட்டி ‘நேத்ரா’ என்று பெயர் வைத்தார். இன்று(ஏப்ரல் 27 ) அந்தப் பெண்ணோட பிறந்தநாள். அதனால் தளபதி விஜய் பெயர் வைத்த போது எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் தமிழன் பார்த்திபன்.

இதையும் பாருங்க : லாக் டவுன் டைமில் ஆஸ்திரேலியாவில் சிக்கிய சீரியல் நடிகை. வாடகை கொடுக்க முடியாமல் எடுத்த முடிவு.

- Advertisement -

இதை பார்த்த விஜய் ரசிகர்கள் அனைவரும் சோசியல் மீடியாவில் இந்த புகைப்படத்தை ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். இந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் போது விஜய் அவர்கள் தேன் ஊட்டி விட்டது மட்டும் இல்லாமல் தங்க செயினையும் பரிசாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தளபதி விஜய்யின் இந்த மாஸ்டர் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளார்கள் என்று சொல்லலாம்.

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஹோட்டல் லீலா அரண்மனையில் நடைபெற்றது. இந்த படம் இம்மாதம் வெளியிடுவதாக இருந்தது. ஆனால், நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால் படத்தின் தேதியை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : ஒரு குழந்தை இருக்கும் நிலையில் நீச்சல் உடையில் நவ்யா நாயர் போட்ட ஆட்டத்தை பாருங்க.

-விளம்பரம்-

கொரோனாவினால் மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும், திரையரங்கள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவை இன்னும் 10, 15 நாள் என்று நீட்டித்து கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் என்ன நடக்குமோ?? இந்த ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாகவும் கூறப்படுகிறது. எப்போது தான் இந்த பிரச்சனை முடிந்து பழையபடி மக்களின் இயல்பு வாழ்க்கை மாறுமோ?? என்பதில் மக்கள் கவலையாக உள்ளார்கள்.

Advertisement