எந்த விஷயத்துக்கு வருத்தப்பட்டு இருக்காரு பாருங்க. இதுதான் தவைரின் தனித்தன்மை. ஹாட்ஸ் ஆஃப் ஜி – காவியா மாறன் குறித்து ரஜினி பேசியதை கேலி செய்த ப்ளூ சட்டை.

0
1688
BlueSattaiMaran
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

சமீபத்தில் வெளியான இரவின் நிழல் படத்தை கூட விமர்சித்து மாறன் தொடர்ந்து பதிவுகளை போட்டு வருகிறார். அதற்கு பார்த்திபனும் பதிலடி கொடுத்து இருந்தார். மேலும், இவர் அண்ணாத்த படம் வெளியான போதே அந்த படத்தை தாறு மாறாக விமர்சித்து பேசி இருந்தார். இதனால் ரஜினி ரசிகர்களும் இவரை திட்டி தீர்த்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் மீண்டும் ரஜினியை சீண்டி இருக்கிறார் மாறன்.

- Advertisement -

அண்ணாத்த படத்தை தொடர்ந்து தற்போது ரஜினி, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மலையாள நடிகர் மோகன்லால் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தான் தயாரித்து உள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது

மேலும், இந்த நிகழ்ச்சியில் கலாநிதி மாறனின் மகளும் சன் ரைஸைஸ் அணியின் உரிமையாளர்களின் ஒருவரான காவியா மாறனும் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய பேசிய நடிகர் ரஜினிகாந்த் தயவுசெய்து சன்ரைசர்ஸ் அணியில் நல்ல வீரர்களை அடுத்த முறை தேர்வு செய்யுங்கள். ஒவ்வொரு முறையும் காவியா மாறனை தொலைக்காட்சியில் பார்க்கும் போது மனம் வேதனையாக இருக்கிறது என்று ரஜினி கூறியுள்ளார்.

-விளம்பரம்-

ரஜினியின் இந்த பேச்சை கேட்டு அரங்கமே சிரிப்பலையில் ஆழ்ந்தது. இப்படி ஒரு நிலையில் ரஜினியின் இந்த பேச்சை கேலி செய்யும் விதமாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன் ‘மணிப்பூர் பெண்களுக்கு ஏற்பட்ட நிலை குறித்து உச்சநீதிமன்றம், பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி மற்றும் பலர் வருத்தம், கண்டனம் தெரிவிச்சிட்டாங்க. பட்.. முரட்டுக்காளை இதுவரை அதுபத்தி பேசல. ஆனா.. எந்த விஷயத்துக்கு வருத்தப்பட்டு இருக்காரு பாருங்க. இதுதான் தவைரின் தனித்தன்மை. ஹாட்ஸ் ஆஃப் ஜி. இது மாதிரி பல அரிய கருத்துகளை சொல்லிட்டே இருங்க‌. மக்களுக்கு மிகுந்த பயனைத்தரும்.

ஜெயிலர் படத்தின் அறிவிப்புகள் வந்ததில் இருந்தே ரஜினியை கடுமையாக கேலி செய்து வருகிறார் மாறன். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஜினி ”வாழ்க்கையில் பணம், பேர், புகழ் எல்லாவற்றையும் கடந்து நிம்மதியாக இருக்க வேண்டும். என் வாழ்க்கையில் நான் அனைத்து உச்சங்களையும் தொட்டுவிட்டேன். ஆனால், சித்தர்களிடம் உள்ள நிம்மதி, சந்தோஷம் 10 சதவீதம் கூட இதுவரை எனக்கு கிடைக்கவில்லை என்று கூறிஇருந்தார்.

இப்படி ஒரு நிலையில் ரஜினியின் இந்த பேச்சை கேலி செய்த மாறன் ‘உங்க படத்துல வர்ற மாதிரி எல்லா சொத்தையும் ஏழைகளுக்கு எழுதி வச்சிட்டு… இமயமலையில் நிம்மதியை தேடலாமே ஜி.’ என்று பதிவிட்டு இருந்தார். தற்போது ரஜினியின் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா பேச்சையும் கிண்டல் செய்து ரஜினி ரசிகர்களை மீண்டும் கடுப்பேற்றி இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

Advertisement