டயத்துக்கு வராமல் கதை சொல்ல வரும்போதே நெல்சன் செய்த அலப்பறைகள் – ரஜினியே சொன்ன விஷயம்

0
1338
Rajini
- Advertisement -

நெல்சன் கதையில் நடிக்க ஓகே சொன்னது குறித்து ரஜினி கூறியிருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் ரஜினி நடித்த ஜெயிலர் படம் குறித்து தான் ட்ரெண்டிங் ஆக சென்று கொண்டு இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பின் இந்த படத்தின் முதல் பாடலான “காவாலா” பாடல் கடந்த மாதம் வெளியாகி இருந்தது. அதனை அடுத்து இரண்டாவது, மூன்றாவது பாடல் எல்லாம் வெளியாகி இருக்கிறது. இந்த பாடல் முழுக்க முழுக்க ரஜினிக்காக உருவாக்கப்பட்ட பாடலாக இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்த ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஜெயிலர் பட குழுவினர் பலர் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் செம மாஸ் ஆக பேசி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி சோசியல் மீடியாவில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். பின் அவர் நெல்சன் குறித்து சொன்னது, அண்ணாத்த முடிந்த பிறகு ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்க தாமதமாகிவிட்டது.

- Advertisement -

ஆடியோ வெளியீட்டு விழா:

அதற்கு காரணம் சரியான கதையும், இயக்குனரும் கிடைக்கவில்லை. சினிமாவை அப்பாவாக சொன்னால் இயக்குனரை அம்மாவாக சொல்லலாம். இயக்குனர் ஆள் தான் ஒரு நல்ல படத்தை கொடுக்க முடியும். என்னுடைய கேரியரிலும் இயக்குனர்கள் தான் என்னை மேலும் கொண்டு போனார்கள். 48 வருடமாக சினிமாவில் இருக்கிறேன் என்று சொன்னால் அதற்கு காரணம் இயக்குனர்கள் தான். முத்துராமன் சாரில் ஆரம்பித்து மகேந்திரன், ராஜசேகர், சுரேஷ், பி வாசு, கேஎஸ் ரவிக்குமார், ஷங்கர் ,ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் என்று இந்த வரிசையில் தற்போது நெல்சன் இருக்கிறார்.

சினிமா வெற்றிக்கு காரணம்:

நிறைய இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டேன். பலபேர் பாட்ஷா மாதிரி இருக்கும், அண்ணாமலை மாதிரி இருக்கும் என்றெல்லாம் சொல்வார்கள். அதெல்லாம் ஏற்கனவே நடந்தது. சிலர் பிரம்மாண்டமாக இருக்கும் என்று சொல்வார்கள். அது எந்த அளவுக்கு இருக்கும் என்று ஒரு சந்தேகமாக இருந்தது. இன்னும் சிலர் online சொன்னார்கள். அது டெவலப் பண்ணி கொண்டு வந்தால் அது வேற மாதிரி இருக்கும். இதனால் கதையைக் கேட்க வேண்டாம் என ஒரு கேப் விட்டுவிட்டேன். அதற்கு பிறகு தான் சன் பிக்சர்ஸ் கண்ணன் போன் பண்ணி நெல்சன் உங்களுக்காக நல்ல கதை வைத்திருக்கிறான். நீங்கள் கேளுங்கள் என்று சொன்னார்.

-விளம்பரம்-

நெல்சன் குறித்து சொன்னது:

நெல்சன் உடைய கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் என அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன். ரொம்ப நல்ல படங்கள். நான் அவரிடம் லைன் கேட்டேன். உடனே நெல்சன், பீஸ்ட் படத்திற்காக நார்த் இந்தியாவில் சூட்டிங்கில் இருக்கிறேன். 20 நாள் படப்பிடிப்பு நடத்தியதும் உங்களுக்கு வந்து சொல்றேன் என்றார். நானும் ஓகே சொல்லிவிட்டு காத்திருந்தேன். 20 நாள் கழித்து அவர் திரும்பி வந்த பிறகு கூட வரவில்லை. விசாரித்தால் இன்னும் பத்து நாள் டைம் கேட்டார். சரி பரவாயில்லை என்று சொல்லி பத்து நாள் கழித்து ஒரு பத்து மணிக்கு வர சொன்னேன். 10.30 ஆச்சி ஆளே வரவில்லை. 11:40ஆச்சி, 11:50 ஆட்சி அவர் வரவில்லை. அதற்கு பிறகு அவருடைய கார் உள்ளே வந்தது.

நெல்சன் சந்திப்பு:

அங்கிருந்து வீட்டிற்கு வர அதிகபட்சம் ஒரு நிமிஷம் ஆகும். ஆனால், ஐந்து நிமிடம் ஆகியும் உள்ளே வரவில்லை. என்னடா என்று பார்த்தால் போனில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு வந்து உட்கார்ந்தார். என்ன சாப்பிடுறீங்க என்று கேட்டதற்கு ஒரு நல்ல காபி சொல்லுங்க. காபி வர கேப்பில் என்னை பார்த்தார். நான் வேஷ்டி பணியோடு இருந்தேன். இந்த ஆளு ஹீரோவா என்று பார்த்தார். அப்புறம் ஓன்லைன் சொன்னார். ரொம்ப புதுசா இருந்தது. அதற்க்கு பிறகு முழு கதையை ரெடி பண்ண கொஞ்சம் டைம் கேட்டார். பீஸ்ட் வெளியான பிறகு முழு கதை சொன்னார். முன்பு சொன்னதை விட 100 மடங்கு நன்றாக இருந்தது. அதனால் உடனே சரி தொடங்கலாம் என்று சொல்லிவிட்டேன் என்று கூறியிருந்தார்

Advertisement