துபாயில் இப்படி ஒரு கௌரத்தை பெற்ற முதல் தமிழ் நடிகர் – வெற்றிகொடிகட்டு பட பாணியில் வாழ்த்து சொல்லும் நெட்டிசன்கள்.

0
809
Parthiban
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பார்த்திபன் தட்டிச் சென்றுள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் பார்த்திபன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் மிக பிரபலமான இயக்குனரும் ஆவார். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை இயக்குனர் பார்த்திபனுக்கு கிடைத்துள்ளது.

-விளம்பரம்-

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா என்பது நீண்டகால குடியிருப்பு விசா. இது 5 முதல் 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தானாகவே புதுப்பிக்கப்படும் வசதியையும் கொண்டதாகவும் உள்ளது. அதோடு பல்வேறு துறைகளை சேர்ந்த சாதனையாளர்கள், தொழில் வல்லுனர்கள் மற்றும் அரிய திறன்களை கொண்டவர்களுக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய நடிகர்கள் பலருக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது.

- Advertisement -

பார்த்திபனுக்கு கிடைத்த கௌரவம் :

இந்தி நடிகர்கள் சஞ்சய்தத், ஷாருக்கான், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர். சமீபத்தில் இந்தி நடிகை ஊர்வசி ரவுடாலா, நடிகை மீரா ஜாஸ்மின் ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி கடந்த மாதம் ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை நடிகை திரிஷா பெற்றார். இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரக அரசு இந்த விருதை இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபனுக்கும் வழங்கியுள்ளது.

கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் நடிகர் :

இந்த கோல்டன் விசாவை பெரும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பார்த்திபன் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து பார்த்திபன் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பேசி இருப்பது, எனக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டதற்கு ரொம்ப சந்தோஷப்படுகிறேன். அரசாங்கத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். இந்த சிறப்புரிமைக்கு தகுதியானவன் என்று என்னைக் கருதிய அரசுக்கும் அன்புக்கும் நன்றி. அதுமட்டுமில்லாமல் இந்த கௌரவத்தைப் பெறும் முதல் தமிழ் நடிகர் நான் என்பதாக அதை பெற்றுத் தர முயற்சி எடுத்த JUMA ALMHEIRI GROUP OF COMPANY-MOHAMMED SHANID (CEO)& இதர நண்பர்கள் சொன்னார்கள்.

-விளம்பரம்-

சேரனின் வித்யாசமான வாழ்த்து :

மேலும், விசாரித்ததில் உண்மை என்றும் தெரிய வந்துள்ளது என்று பதிவிட்டு உள்ளார். இதற்கு பலரும் பார்த்திபனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பார்த்திபனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சேரன், தான் இயக்கிய வெற்றிகொடிகட்டு படத்தில் பார்த்திபன் பேசிய பிரபலமான காமெடி வசனத்தை பதிவிட்டுள்ளார். அதில் ”சார்… விசாவுக்கு முகவரி நம்பர் 6, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்குச்சந்து, துபாய் மெயின் ரோடு, துபாய்… தான கொடுத்திங்க..

அன்று பணத்தை கட்டி ஏமாந்த நபர் :

அந்நிய மண்ணில் எம் மண்ணின் மைந்தனுக்கு கிடைத்த அங்காரத்திற்கு ஆனந்தம்விளயாடும்வீடு குழு சார்பாக வாழ்த்துக்கள்.. என்று பதிவிட்டுள்ளார். அதே போல ரசிகர்கள் பலரும் வெற்றிகொடிகட்டு படத்துடன் ஒப்பிட்டு பார்த்திபனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் ‘ஒரு 18 வருடத்திற்கு முன்பு ஆனந்து ராஜ் என்ற ஏஜெண்டிகிட்ட துபாய் போக1 இலட்சம் ரூபாய் பணத்த கட்டி ஏமாத்தவருக்க இன்று துபாய் யோட கோல்டன் விசா கிடைச்சுருக்கு வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

துபாய் வீட்டு அட்ரஸ் இன்னும் அதேதானா :

மற்றொரு ட்விட்டர் வாசி ’21 ஆண்டுகளுக்கு முன்னர் துபாய்க்கு visa வாங்க முயற்சித்து, தோல்வியடைந்தார். இன்று Golden Visa வழங்கப்பட்டிருக்கிறது. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டுள்ளார். பொறுத்தார் பூமி ஆள்வார். அப்புறம், துபாய் வீட்டு அட்ரஸ் இன்னும் அதேதானா பார்த்திபன் சார் என்றும் கமன்ட் போட்டு இருக்கிறார்.

Advertisement