வலிமை அஜித்தை கேலி செய்ததால் கண்டித்த சுரேஷ் மற்றும் ஆரி – இருவரையும் கேலி செய்து மாறன் போட்ட பதிவு.

0
568
maaran
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர். அதோடு இவர் ‘ஆன்டி இந்தியன்’ என்ற படத்தை இயக்கி நடித்தும் இருந்தார். இந்த படம் சரியாக ஓடவில்லை. பின் மீண்டும் இவர் தனது விமர்சன பணியை செய்து வருகிறார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் ‘வலிமை’ படத்தை ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்து இருக்கிறார். நேர்கொண்ட படத்தை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன், பைக் ரேஸ் போன்ற காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருக்கிறது.

- Advertisement -

வலிமை படம் பற்றிய தகவல்:

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து அஜித் படம் வெளியாகி இருப்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். மேலும், இந்த படம் வெளியானதை பாண்டா பிரஷாந்த், சினிமா பையன் அபிஷேக் என்று பலர் விமர்சனம் செய்தனர். ஆனால், ப்ளூ சட்டை மாறன் வலிமை படத்தை குறித்து விமர்சனம் செய்தது பயங்கர சர்ச்சையானது. அதில் அவர், படத்தை கழுவி ஊற்றியுள்ளதோடு மட்டுமல்லாமல், அஜித்திற்கு மூஞ்சில் தொப்பை இருக்கு.

படம் தயாரித்த போனி கபூர் தான் ஒரு சேட் என்றால் அஜித் பஜன் லால் சேட்டு மாதிரி கொழுக் முழுக்னு இருக்கார். டான்ஸ் ஆடவே கஷ்டப்படுறார் என்று அஜித்தை உருவ கேலி செய்துள்ளார்.இப்படி ப்ளூ சட்டை மாறன் அஜித்தை உருவ கேலி செய்து இருக்கும் விஷயம் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையானது. இதனால் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ப்ளூ சட்டை மாறன் மீது கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

ஆரியை டிவி நடிகர் என்று குறிப்பிட்ட மாறன் ::

இந்நிலையில் வலிமை படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன் குறித்து நடிகர் ஆரி மற்றும் நடிகர் சுரேஷ் இருவரும் கண்டித்து பேசி இருந்தனர். படத்தை திருத்திக்கொள்ளும் கருத்துக்கள்சொல்லலாமே தவிர அந்தப் படத்தை காலி பண்ணு மாதிரி கமெண்ட் சொல்வது ரொம்ப தவறான ஒன்றும் என்றும் கூறி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் ஆரிக்கு பதிலடி கொடுத்த ப்ளூ சட்டை, ப்ளூ சட்டையை நார் நாரக துவைத்து, கிழித்து, அயர்ன் செய்து மடித்து கலாய்த்த டிவி நடிகர் ஆரி என்று கூறியுள்ளார்.

வெண்ணெய் சுரேஷ் :

அதே போல சுரேஷ் குறித்து பதிவிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன், ப்ளூ சட்டையை தாறுமாறாக கலாய்த்து கிழித்து தொங்கவிட்டு கதற வைத்து கலாய்த்த Butter சுரேஷ் எனும் துணை நடிகர். புலிக்குத்தி பாண்டி படத்தில் உங்கள் ஜட்டியை கழட்டி ஹீரோயின் மீது வீசி பெண்களை கொச்சைப்படுத்திய ‘வெண்ண’ சுரேஷ் அவர்களே.இதுபோன்ற கேவலமான சீன்களில் நடிக்காமல் நாகரீகம் காக்க வேண்டும். மற்றவர்களின் அருகதை பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லை – வெண்ணை ரமேஷ், மதுரை மாவட்டம் என்று கூறியுள்ளார்.

Advertisement