ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் ? – விஜய் மக்கள் இயக்க நிர்வாகி மீது பாய்ந்த வழக்கு

0
1833
- Advertisement -

விஜய் மக்கள் இயக்க நிர்வாகி விபச்சார விடுதி நடத்தி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இவருக்கு விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-

இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை. இதனால் விஜய் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. மேலும், இவர் சமீபத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறார்.

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கம்:

இந்த விழாவில் விஜய் அவர்கள் மாணவர்களின் எதிர்காலம், கல்வி, அரசியல், தலைவர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசி இருக்கிறார். மாணவர்களுக்கு விஜய் பரிசு பேசி குறித்து பலருமே பாராட்டி இருந்தார்கள். இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி விபச்சார விடுதி நடத்தி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, திருச்சி கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் ஸ்பா என்ற அமைப்பு இயங்கி வருகிறது. ஆனால், இங்கு பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

போலீஸ் விசாரணை:

இதனை அடுத்து போலீசார் ஸ்பாவிற்கு சென்று விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அப்போது அங்கு வீட்டில் சைன் ஸ்பா என்ற பெயரில் கர்நாடகாவை சேர்ந்த லட்சுமி தேவி என்பவரும் இரண்டு பெண்களும் இருந்திருக்கிறார்கள். இதனை அடுத்து போலீஸ் வீட்டில் சோதனை செய்திருக்கிறார்கள். அப்போது ஸ்பா என்ற உரிமை எதுவும் பெறாமல் பல ஆண்டுகளாக இதை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அங்கிருந்து இரண்டு பெண்களையும் மீட்டு காப்பகத்துக்கு போலீஸ் அனுப்பி வைத்தார்கள்.

-விளம்பரம்-

விஜய் மக்கள் இயக்க நிர்வாகி செய்த வேலை:

இது தொடர்பாக மேலாளர் லட்சுமி தேவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திருக்கிறார்கள். அப்போது இந்த ஸ்பாவின் உரிமையாளர் திருச்சி வயலூர் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர் தான் என்று தெரிய வந்திருக்கிறது. இதனை அடுத்து ஸ்பா நடத்திய உரிமையாளர் செந்தில் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர் மேலும், இந்த செந்தில் என்பவர் திருச்சியில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளராக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

விழாவில் செந்தில்:

அது மட்டும் இல்லாமல் இவர் திருச்சி நகர் பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளையும் செய்திருக்கிறார். சமீபத்தில் சென்னையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற மாணவ மாணவிகளுக்கு விருது வழங்க விழாவிலும் செந்தில் கலந்து கொண்டிருந்தார். தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் குறித்து அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Advertisement