ஒரு பெண்ணிடம் இப்படியா நடந்து கொள்வது? போனிகபூரை வறுத்து எடுக்கும் ரசிகர்கள்

0
145
- Advertisement -

நடிகை பிரியாமணியிடம் தயாரிப்பாளர் போனி கபூர் நடந்திருக்கும் மோசமான செயல் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் போனி கபூர். இவர் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து இருக்கிறார். இவர் நடிகை ஸ்ரீதேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்திய திரையுலகில் மாபெரும் நடிகையாக திகழ்ந்து இருந்தார் ஸ்ரீதேவி.

-விளம்பரம்-

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையாளம் என்று பல மொழி படங்களில் கொடி கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இவர் தனது கடைசி காலம் வரை இளமை மாறாமல் இருந்தார். அதோடு ஸ்ரீதேவி இறப்பதற்கு இறுதி வரை தொடர்ந்து நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் ஜான்வி கபூர் பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருக்கிறார்.

- Advertisement -

போனி கபூர் குறித்த தகவல்:

மேலும், போனி கபூர் அவர்கள் அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த நேர்கொண்ட பார்வை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த படம் ஹிந்தி ரிமேக்காக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதனை தொடர்ந்து இவர் கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த வலிமை படத்தையும் போனி கபூரே தயாரித்து இருந்தார். அதன் பின் இவர் ஆர் ஜே பாலாஜியின் வீட்டில் விசேஷம், உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களை எல்லாம் தயாரித்திருக்கிறார்.

போனி கபூர் படங்கள்:

இந்த படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதை அடுத்து சமீபத்தில் அஜித் நடிப்பில் வினோத்குமார் இயக்கத்தில் வெளிவந்திருந்த துணிவு படத்தையும் போனி கபூர் தான் தயாரித்திருக்கிறார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை அடுத்து தற்போது போனி கபூர் அவர்கள் அஜய் தேவ்கான் நடிப்பில் உருவாகி வரும் மைதான் என்ற இந்தி படத்தை தயாரித்திருக்கிறார்.

-விளம்பரம்-

மைதான் படம் பிரீமியர் காட்சி:

இந்த படத்தில் அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக பிரியாமணி நடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தினுடைய பிரீமியர் காட்சி மும்பையில் நடைபெற்றிருக்கிறது. இதில் மைதான் பட குழுவினர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது ப்ரியாமணி பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்திருந்தார். பின் அவருடன் தயாரிப்பாளர் போனிக்கபூரும் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்திருக்கிறார். இது தான் தற்போது இணையத்தில் சர்ச்சையாகி வருகிறது.

நெட்டிசன்கள் கண்டனம்:

அதாவது, புகைப்படம் எடுக்கும் போது போனி கபூர் அவர்கள் ப்ரியா மணியின் தோள், இடுப்பின் மீது கை வைத்து போஸ் கொடுத்திருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலருமே கண்டித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் போனி கபூரின் இந்த செயல் ப்ரியாமணிக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. படம் தயாரிப்பாளராக இருந்தாலும் பொதுவெளியில் இப்படி நாகரிகம் இல்லாமல் எல்லாம் நடந்து கொள்வதா? இது வேண்டும் என்றே போனிக்கபூர் செய்து இருக்கிறார் என்றெல்லாம் கூறி கண்டித்தும் விமர்சித்தும் வருகிறார்கள்.

Advertisement