‘ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை’ அஜித்தை விமர்சித்த போஸ் வெங்கட் – வலிமை வில்லன் கொடுத்த பதிலடி.

0
435
Ajith
- Advertisement -

தற்போது சோசியல் மீடியா முழுவதும் மிக்ஜாம் புயல் குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு இருக்கிறது. இந்த புயல் வங்கக் கடலில் உருவாகி இருக்கிறது. இந்த மிக்ஸாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல இடங்களில் அதிகமான மழை பெய்து இருக்கிறது. இதனால் பலருமே வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும், கன மழையால் சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது.

-விளம்பரம்-

சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மக்கள் வெளிவர முடியாத சுழலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு இது வரலாறு காணாத மழை என்றும் கூறுகிறார்கள். சில தினங்களுக்கு முன் காற்றின் வேகம் குறைந்து மழை பெய்யும் அளவும் குறைந்திருப்பதால் மீட்பு பணிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

- Advertisement -

மிக்ஜாம் புயல்:

மேலும் இது தொடர்பாக சோசியல் மீடியாவிலும் பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என பலருமே இந்த புயலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகர் விஷ்ணு விஷாலும் ஒருவர். இவர் இது தொடர்பாக பதிவு ஒன்றும் போட்டிருந்தார். அதோடு விஷ்ணு விஷாலுடன் பாலிவுட் நடிகர் அமீர் கானும் இந்த வெள்ளத்தில் சிக்கி இருக்கிறார். இவர் தன்னுடைய தாயின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் வந்திருக்கிறார்.

அஜித் செய்த உதவி:

வந்த நேரத்தில் இவர் புயலில் சிக்கி இருக்கிறார். பின் மீட்பு படையினர் இவர்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்கிறார்கள். மேலும், இந்த தகவலை அறிந்த அஜித் குமார், விஷ்ணு விஷால்- அமீர்கான் இருவரையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து இருக்கிறார். இதை நடிகர் விஷ்ணு விஷால் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக அஜித்குமாரை விமர்சித்து நடிகர் போஸ் வெங்கட் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

நடிகர் போஸ் வெங்கட் பதிவு:

அதில் அவர், வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு. இங்கிருக்கும் அத்தனை வட நாட்டவரையும் தமிழகம் காக்கும் (உங்களுக்குள் நல்ல இணைப்பு உண்டு). ஆனால் உங்களை விரும்பும். டிக்கெட் எடுத்து உங்களை பார்க்கும் ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை. (ஒரு போட் அவனுக்கும் விட்டிருக்கலாம்) என்று கூறி இருக்கிறார். இதைப் பார்த்த நடிகர் ஜான் கொக்கன் பதில் பதிவு போட்டு இருக்கிறார்.

நடிகர் ஜான் கொக்கன் பதில் பதிவு:

அதில் அவர், ஒருவரை குறை சொல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அவர் என்ன செய்தாலும் குறை சொல்லியே ஆவார்கள். அதற்கு இந்த கதை தான் உதாரணம் என்று ஒரு போஸ்ட் ஒன்று பதிவிட்டு இருக்கிறார். தற்போது நடிகர் ஜான் பதவி தான் வைரலாகி வருகிறது. இவர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகியிருந்த பாகுபலி படத்தில் நடித்திருந்தார். அதற்குப்பின் இவர் கேஜிஎப், துணிவு போன்ற படங்களிலும் வில்லனாக மிரட்டி இருக்கிறார்.

Advertisement