இதெல்லாம் ஒரு ஷோவா, இந்த ஷோவ தட பண்ணனும் – பிக் பாஸை கிழித்துவிட்டு பதிவை நீக்கிய பின் வனிதா கொடுத்த விளக்கம்.

0
443
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 66 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, பிராவோ, அக்ஷயா ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் வனிதாவின் மகள் ஜோவிகாவும் ஒருவர். ஆரம்பத்தில் ஜோவிகா நன்றாக தான் விளையாடி வந்தார். நிகழ்ச்சியில் ஜோவிகா: படிப்பு குறித்து விசித்திராவிடம் சண்டை போட்டது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று இருந்தது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல மாயா மற்றும் பூர்ணிமாவுடன் இணைந்து இவர் மற்றறவர்களை மரியாதை இல்லாமல் நடத்தி இருக்கிறார்.

- Advertisement -

நிகழ்ச்சியில் ஜோவிகா:

குறிப்பாக இவர் அர்ச்சனாவை வயது வித்யாசம் பார்க்காமல் வாடி போடி என்று சொன்னதோடு அவரது மன உலைச்சலை கேலி செய்யும் வகையில் மெடிக்கல் ரூம் போ என்று எல்லாம் தரக்குறைவாக பேசி இருந்தார்.
அதே போல டாஸ்க்கில் கூட இவர் சரியாக பங்கேற்பது கிடையாது. பின் ஜோவிகா அந்த கேங்கில் இருந்து பிரிந்து வந்த பின்னும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சுவாரசியம் எதுவும் கொடுக்கவில்லை . அதோடு ஜோவிகா நிகழ்ச்சியில் சாப்பிடுவது, தூங்குவது, வழுக்கி விழுவது என்று தான் இருந்து வருகிறார்.

ஜோவிகா எலிமினேட்

இதனால் சமூக வலைதளத்தில் ட்ரோல்களுக்கு அதிகமாகி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்று ஜோவிகா எலிமினேட் ஆகி இருக்கிறார். ஜோவிகா வெளியேறியதிலிருந்து வனிதா பிக் பாஸை விமர்சித்து பதிவு போட்டு இருக்கிறார். அந்த வகையில் இவர், பிக் பாஸ் சரியில்லை. எல்லாம் தப்பாக செய்கிறார்கள். இந்த சீசன் ஒரு பிளாப் தான். இந்த முறை இருப்பவர்கள் எல்லாருமே போர் போட்டியாளர்கள் தான். இந்த நிகழ்ச்சிக்கான மரியாதையே அவர்கள் கெடுக்கிறார்கள்.

-விளம்பரம்-

வனிதா பதிவு:

இந்த நிகழ்ச்சியின் டைட்டில் பட்டதை பெறுவதற்கு யாருக்குமே தகுதி இல்லை என்றெல்லாம் பேசி இருந்தார். உடனே இந்த ட்விட்டை டெலிட்டும் செய்திருக்கிறார். அதற்குப்பின் இவர் மீண்டும் ஒரு பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில், பிக் பாஸ் குறித்து என்னுடைய டீவ்ட்களை நீக்கிவிட்டேன். ட்விட்டரில் எமோஷன் ஆக கூடாது. குறிப்பாக ரியாலிட்டி நிகழ்ச்சி குறித்து பதிவிடுவதற்கு ட்விட்டரை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

நெட்டிசன்கள் பதிவு:

இதனால் நான் ட்விட்டரில் பிக் பாஸ் குறித்து பதிவிடுவதை நிறுத்துகிறேன். பிக் பாஸ் லைவ் பார்ப்பதற்கு வெறுப்பாகவும் தொந்தரவுமாக இருக்கிறது. பிக் பாஸ் லைவ் பார்க்காமல் இருப்பது நல்லது. பிக் பாஸ் ஒரு பேக் டிராமா. இது குறித்து ரிவ்யூவும் கொடுக்க மாட்டேன். டீவ்ட்டில் இருந்து வெளியேறுகிறேன் என்று கூறியிருக்கிறார். இதைப் பார்த்து நெட்டிசன்கள், எதற்கு இவ்வளவு கதறல்? உங்க பொண்ணு வெளியே வந்ததுனால இந்த காண்ட காமிக்கிறீங்களா? ஏன் இவ்வளவு கோபம் என்றெல்லாம் கிண்டல் செய்து வருகிறார்கள்.

Advertisement