ஹிட் கொடுக்க முடியாமல் தவிக்கும் தமிழ் சினிமா. இரண்டே மாதத்தில் 3 ஹிட் கொடுத்த மலையாள சினிமா. தமிழ் சினிமாவில் என்ன மிஸ்டேக்.

0
262
- Advertisement -

தமிழ் சினிமாவில் இந்த 2024 ஆம் ஆண்டு வெளியான பிறமொழி படங்களின் வசூல் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் கேப்டன் மில்லர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், விஜி சந்திரசேகர், பிரியங்கா கிஷன், வினோத் கிஷன், நிவேதிதா சதீஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மிகப்பெரிய பொருட்செலவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில்
கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. அதோடு இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்ததாக கூறப்பட்டது. இதை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருந்தது. ஏலியன் ஜானரில் வெளிவந்த இந்த படமும் 100 கோடி வசூல் செய்திருந்ததாக கூறப்பட்டது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகியிருந்த படம் லால் சலாம் . இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் கலவியான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் வெறும் 50 கோடி தான் வசூல் செய்திருந்ததாக கூறப்பட்டது. அதேசமயத்தில் அசோக் செல்வன்- சாந்தனு நடிப்பில் வெளியாகி இருந்த படம் ப்ளூ ஸ்டார். இந்த படம் மக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால், பாக்ஸ் ஆபீஸில் 50 கோடி கூட வசூல் செய்யவில்லை.

அதன் பின் சமீபத்தில் மணிகண்டனின் லவ்வர் படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வசூல் செய்யவில்லை. இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளியான மற்ற படங்களும் பெரிதளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூல் செய்த மலையாள மொழி படங்களின் பட்டியல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் காதலர் தினத்தை காதலர் தினத்தை ஒட்டி தமிழில் லவ்வர் படம் வெளியான அதே நாளில் தான் பிரேமலு என்ற படம் வெளியானது. இந்த படம் 75 கோடி வசூல் செய்திருக்கிறது.

-விளம்பரம்-

பின் இந்த வாரம் தமிழில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஜோஸ்வா, அர்ஜுன் தாஸ்- காளிதாஸ் நடிப்பில் போர் போன்ற படங்களெல்லாம் வெளியாகி இருந்தது. ஆனால், இந்த படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. அதே சமயம் மலையாளத்தில் மஞ்சுமோல் பாய்ஸ் என்ற படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தை சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் எடுத்திருக்கிறார்.

இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அதோடு இந்த படம் வெளியாகி 10 நாட்களிலேயே 50 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்யும். இதை அடுத்து மம்முட்டியின் பிரமயுகம் என்ற படம் 50 கோடி வசூல் செய்திருக்கிறது. இப்படி இந்த ஆண்டு தொடங்கி இரண்டே மாதத்தில் தமிழ் சினிமாவை விட மலையாள சினிமா படங்கள் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது.

Advertisement