தேர்வறையில் மணப்பெண்கள், தேர்வன்றே ஏன் திருமணம் வைக்க வேண்டும் ? இது என்ன புதிய ட்ரெண்டா ? நெட்டிசன்கள் கேலி

0
2901
Wedding
- Advertisement -

தேர்வறையில் மணப்பெண்கள் தேர்வு எழுதுவதை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் விவாதம் செய்திருக்கும் பதிவு வைரல் ஆகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே தேர்வு எழுது திருமணம் முடிந்தவுடன் வந்த மண பெண், திருமண கோலத்தில் வாக்களிக்க சென்று தம்பதி என செய்திகள் சோசியல் மீடியாவில் உலா வந்து கொண்டு தான் இருக்கிறது. அதேபோல் நீட் தேர்வு நடைபெறும் போதும் அனைத்து மாணவிகளின் துப்பட்டா, தோடு நகைகள் வெளியே கழட்டி வைத்த பிறகு தேர்வு எழுத அனுமதிக்கிறார்கள்.

-விளம்பரம்-

இதற்கு அரசியல் தலைவர்கள், நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வரும் செய்தி வரும் அதிகம். அதே போல் கல்லூரி தேர்வுகள், வேறு நுழைவுத் தேர்வுகள் நடைபெற்றாலும் மணக்கோலத்துடன் மாணவி தேர்வு எழுதியிருக்கிறார். இந்நிலையில் தற்போது திருமணம் முடிந்த கையுடன் மாலையும் கழுத்துமாக மாணவி தேர்வு எழுத வந்து இருக்கிறார். அவர் பின்னரே அவருடைய கணவர் வந்திருக்கிறார். மணக்கோலத்தில் வந்த அந்த பெண் நிறைய நகை, பட்டு புடவை அணிந்து மணப்பெண் தோற்றத்திலேயே வந்து இருக்கிறார்.

- Advertisement -

மேலும், ஆரம்பத்தில் இந்த செய்திகள் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. பொதுமக்களும் இதை உன்னிப்பாக கவனித்து பேசி இருந்தார்கள். ஆனால், தற்போது இந்த மாதிரி செயல்களை நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். சிலர், தேர்வு நாட்களில் தான் திருமணம் வைக்கணுமா? மணக்கோலத்துடன் வருவது எல்லாம் விளம்பரத்துக்கே. ஊடகங்களில் எளிதில் பிரபலமாகும் நோக்கில் தான் இந்த யுத்தியை அவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் மணக்கோலத்துடன் தேர்வு எழுத வரும் மாணவிக்கு மட்டும் பிரச்சனை இல்லாமல் மற்ற மாணவிகளுக்கும் கவனம் சிதற வாய்ப்பு இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் இது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றது. குறிப்பாக படித்துக் கொண்டிருக்கும் மாணவிக்கு ஏன் இவ்வளவு அவசரமாக திருமணம் செய்து வைக்கிறார்கள் என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். எந்த ஆணாவது மணக்கோலத்தில் போய் கல்லூரி தேர்வு எழுதி இருக்கிறாரா? பெண்களை மட்டும் ஏன் இவ்வளவு சீக்கிரமாக திருமணம் செய்து வைத்து அவர்களை இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகிறீர்கள் என்றெல்லாம் விமர்சித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இது குறித்து சோசியல் மீடியாவில் அரசு பள்ளி ஆசிரியர் மகாலட்சுமி கூறியிருப்பது, ஏன் தான் இந்த பிள்ளைகள் இப்படி இருக்கிறார்களோ? தெரியவில்லை. கல்யாணம் தேதியும், பரிட்சை தேதியும் ஒன்றாக இருக்கும் என்று தெரிந்தும் இது எதற்கு? எந்த ஆம்பளையாவது தேர்வு அன்னைக்கு பரீட்சைக்கு எழுத ஓடி வராங்களா? தேர்வுக்கு முன்னாடி அல்லது பின்னாடியாவது கல்யாண தேதியை முடிவு பண்ணனும். ஆனால், உங்களுக்கு மட்டும் என்னமா? உறுதியா நின்னு சொல்லுங்க. வேற முகூர்த்த நாள் இந்த ஜென்மத்தில் வராதா? அல்லது அந்த கல்யாண துணியை மாத்தி வரலாம் இல்லையா! என்று கூறியிருக்கிறார்.

இதற்கு ஷாலினி என்பவர் கூறியிருப்பது, கல்யாண தேதி 6 மாசம் முன்னாடி குறித்து இருப்பார்கள். மண்டபம் எல்லாம் ஆறு மாசம் முன்னாடி புக் செய்திருப்பார்கள். அந்த தேதிக்கு பத்திரிக்கை அடித்து கொடுத்து முடித்திருப்பார்கள். ஆனால், ஒரு மாசம் முன் தான் தேர்வு தேதி தெரியவரும். அடுத்த சடங்கு சம்பிரதாயமும் நிறைய இருக்கு. புகுந்த வீடு போற வரைக்கும் அந்த மாலையை கூட கழட்டவே கூடாது. இதனால் ஆடையை மாற்ற முடியவில்லை.

இதெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் பெண்கள் படிக்க முடிந்த பிறகு கல்யாணம் வைக்கலாம். ஆனால், நம்ம ஊரில் இன்னும் பெண்கள் படிப்புக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. இதெல்லாம் அந்த பெண்களுக்கு தேவையில்லாத பிரச்சனைகள் தான். இவர்கள் எல்லாம் படித்து முடித்து வேலைக்கு போவார்களா? என்பது கூட மிகப் பெரிய கேள்வியாக தான் இருக்கிறது. இதில் அந்த பெண்களை கேலி பண்ண எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement