கார்த்தி எனக்கு தம்பியா -புகைப்படத்துடன் அவரின் சகோதரி பிருந்தா வெளியிட்ட பதிவு

0
916
- Advertisement -

தமிழ் சினிமாவின் 80 காலகட்டம் துவங்கி இன்று வரை பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகுமார். இவரது மகன்கள் தான் சூர்யா, கார்த்தி. இருவருமே தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர்களாக உள்ளார்கள். இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சூர்யா, கார்த்திக் இவர்கள் இருவரின் நடிப்பில் வெளிவரும் படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது. மேலும், தன் தந்தையை போலவே இவர்கள் இருவரும் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளார்கள்.

-விளம்பரம்-

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. தற்போது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் திரையரங்கில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப் பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

- Advertisement -

சூர்யா-கார்த்திக்கின் திரைப்பயணம்:

பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுபவர்களை வேட்டையாட வக்கீல் கோட்டை கழட்டி வைத்து விட்டு வேட்டிக் கட்டிக் கொண்டு சூர்யா செய்யப் போகும் சூரசம்ஹாரம் தான் எதற்கும் துணிந்தவன். மேலும், சூர்யா நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் உள்ளார். சூர்யா பல படங்களை தயாரித்து உள்ளார். அதேபோல் கார்த்திக் நடிப்பில் வெளிவந்து இருந்த சுல்தான் படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது கார்த்திக் அவர்கள் விருமன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சிவகுமார் மகள் பிருந்தா:

இந்த படத்தில் இயக்குனர் சங்கர் மகள் அதிதி நடித்து இருக்கிறார். இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். இப்படி சிவகுமாரின் இரண்டு மகன்களும் கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக உள்ளார். அதோடு சிவகுமாருக்கு மகன்கள் மட்டும் இல்லை பிருந்தா என்ற ஒரு மகளும் உள்ளார். சூர்யா, கார்த்திக் இருவருக்கும் சகோதரி தான் பிருந்தா. மேலும், சிவகுமார் தன் மகளை சினிமாத்துறைக்கு கொண்டு வரவில்லை. பிருந்தா படிப்பு, குடும்பம் என்று செட்டில் ஆகிவிட்டார்.

-விளம்பரம்-

கார்த்திக் குறித்து பிருந்தா போட்ட பதிவு:

இருந்தும் இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். அந்த வகையில் பிருந்தா தன்னுடைய சகோதரர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, இது எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம். எனக்கு எப்போதும் எனது சகோதரர்கள் போல இருக்க வேண்டும். அதனால் ஆண்கள் அணியும் உடையை அணிவேன். முடியை வளர்ப்பது விருப்பம் இல்லை. ஏனென்றால் என் சகோதரர்களிடம் இருந்து வித்தியாசமாக தெரிய கூடாது என்பதற்காக நான் கல்லூரி படிக்கும் வரை என் மூத்த அண்ணனின் சட்டையையும், இளைய அண்ணனின் ஜீன்ஸ்ஸையும் அணிவேன்.

பதில் பதிவு போட்ட கார்த்திக்:

இப்பொழுதாவது நான் தான் இளையவள் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன். மக்கள் என்னிடம் கார்த்தி உன் தம்பியா? எனக் கேட்பார்கள். இனிமேல் அப்படி கேட்காதீர்கள் என குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த நடிகர் கார்த்திக் பதில் பதிவு போட்டிருக்கிறார். அதில் அவர், உன்னைவிட நான் இளமையாக தெரிவதற்கு நான் என்ன செய்ய முடியும்? என்று வேடிக்கையாக பதிலளித்துள்ளார். இப்படி இவர்கள் இருவரும் பதிவிட்டு இருக்கும் பதிவும், புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பல காலமாக பிருந்தா அக்காவா? தங்கையா? என்ற குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு இதன் மூலம் தெளிவு கிடைத்து இருக்கும்.

Advertisement