வெளிநாடுகளில் பாட்டு எழுதினால் தீவே வாங்கலாம் ஆனால் இங்கு? வைரமுத்துவின் மனவேதனை – பின்னணி இது தான்

0
382
- Advertisement -

வெளிநாடுகளில் பாட்டு எழுதினால் தீவே வாங்கலாம். ஆனால், இங்கு பாட்டு எழுதினால் சில லட்சங்கள் தான் காத்திருக்கிறது என்று வைரமுத்து அளித்திருக்கும் பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார். மேலும், இவர் இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார்.

-விளம்பரம்-
vairamuthu

இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து பல பெண்களும் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து இருந்தார்கள். பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார். இருந்தாலும் பலர் வைரமுத்துக்கு ஆதரவாக இருந்தார்கள். ஆனால், பாடகி சின்மயி கூறும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா? என்று பலரும் சந்தேகித்தும் வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் கவிஞர் வைரமுத்து எது செய்தாலும் அவரை குறித்து சின்மயி விமர்சித்துப் பேசி வருகிறார்.

- Advertisement -

ராயல்டி தொகை குறித்த தகவல்:

இந்த நிலையில் விழா ஒன்றில் கவிஞர் வைரமுத்து அவர்கள் சினிமாவின் இசை கலைஞர்களின் நிலைமையைக் குறித்து பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். சமீப காலமாகவே இசையமைப்பாளர்களுக்கும் பாடல் ஆசிரியர்களுக்கும் ராயல்டி தொகை சரியாகவே சென்று சேர்வது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. பாடலாசிரியர் நா முத்துக்குமார் எழுதிய பாடல்களுக்கான ராயல்டி தொகை அவரது குடும்பத்துக்கு சரிவர சென்று சேரவில்லை. இதற்கிடையே பாடலாசிரியருக்கான ராயல்டி தொகையை பெற்றுத் தருவதற்கு IPRS (இந்தியன் பெர்பார்மிங் ரைட் சொசைட்டி லிமிடெட்) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.

வைரமுத்து கலந்து கொண்ட நிகழ்ச்சி:

இந்த நிலையில் சென்னையில் சமீபத்தில் அந்த அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்வில் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து, விவேகா உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். மேலும், இந்த நிகழ்வில் பேசிய வைரமுத்து கூறியிருப்பது. கவிஞர்களுக்கு அட்சய பாத்திரமாகவும் கலைஞர்களுக்கான வழக்கறிஞராகவும் இந்த அமைப்பு செயல்படுகிறது. கலைஞர்கள் பாவம் அவர்கள் கற்பனைவாதிகள். சட்டம் அறியாதோர். உரிமை தெரியாதோர். பூமியில் நின்று கொண்டு நட்சத்திரத்தில் வாழ்வோர். தாய் பாலுக்கும் நிலா பாலுக்கும் வேறுபாடு தெரியாதவர்கள்.

-விளம்பரம்-

மேலை நாடுகளில் இசை கலைஞர் நிலை:

இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் ஸ்வரங்கள் மொத்தம் ஏழு என்பதால் அதன் பிறகு இருக்கும் என் என்னவென்று கூட தனக்கு தெரியாது என்று என்னிடம் கூறி இருக்கிறார். இந்த அமைப்பு வருவதற்கு முன்பு ராயல்டி அல்ல நாயர் டீக்கடை எங்களுக்கு கிடையாது. மேலைநாடுகளில் 100 பாடல்கள் எழுதினால் அவர்கள் சுவாசிப்பதை தவிர வேறு எந்த வேலையுமே செய்ய தேவை இல்லை. பசிபிக் கடல் ஓரத்தில் அவர்களால் தீவுக்கு வாங்கி விட முடியும். பணம் தீர்ந்த பிறகு மீண்டும் பாட்டெழுதி சம்பாதித்துத் தீவு வாங்கிக் கொள்ள முடியும். ஆனால், நான் 7,500 பாடல்கள் எழுதி விட்டேன். இவர்கள் அனுப்பும் சில லட்சங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

Vairamuthu

ராயல்டியை போராடி வாங்கியவர்:

திரைத்துறையில் 25 ஆண்டுகள் இருக்கமுடியும். ஆனால், அதில் 15 ஆண்டுகள் தான் புகழுடன் இருக்க முடியும். கல்லில் நார் உரிப்பது போல இவர்கள் போராடி ராயல்டியை பெற்றுத் தருகின்றனர். இசையமைப்பாளர்களும் பாடலாசிரியர்களும் பாவம். 10 ஆண்டுகளுக்கு முன் உச்சத்தில் இருந்தோரை இப்போது உச்சரிக்கவே மறந்துபோன சமூகத்தில் நாம் வாழ்கிறோம். 50 ஆண்டுகளுக்கு முன் இவ்வமைப்பை தோற்றுவித்த எம்.வி. சீனிவாசன் ஒரு கம்யூனிஸ்ட். ஜெயகாந்தனின் தென்னங்கீற்று ஊஞ்சலிலே பாடலுக்கு இசையமைத்தவர் அவர். அரசு , நிறுவனம் , நீதிமன்றங்களோடு போராடி இவர்கள் ராயல்டியை பெற்றுத் தந்து இருக்கின்றனர் என்று கூறியிருந்தார்

Advertisement