நயன்தாராவின் அன்னபூரணி படத்தின் மீது போடப்பட்டு இருக்கும் வழக்கு தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மலையாளத்தில் ஒரு லோக்கல் சேனலில் தன்னுடைய பயணத்தை தொடங்கிய நயன் இன்று சினிமாவில் ஒரு டாப் நடிகையாகவும், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும், பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராகவும் கலக்கி கொண்டிருக்கிறார். இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.
சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் நயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் அன்னபூரணி. இந்த படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க சமையலை மையமாக வைத்து இயக்குனர் கொடுத்து இருக்கிறார். படத்தில் நடிகை நயன்தாரா பிராமண குடும்ப பெண்ணாக நடித்து இருக்கிறார்.
அன்னபூரணி படம்:
இவர் திருச்சியை சேர்ந்தவர். இவருக்கு சின்ன வயதில் இருந்தே உணவை ருசி பார்ப்பதில் நிறைய திறமை இருக்கும். அதோடு இவரிடம் சமைத்து ருசி பார்க்க சொல்வார்கள். இதனால் இவருக்கு சமையல் மீது அதிக ஆர்வம் வந்துவிடும். மேலும், கோயிலில் இவருடைய தந்தை பிரசாதம் சமைப்பவர். இதனால் இவருக்கு அசைவம் பிடிக்காது. பின் நயன்தாரா தன்னுடைய கல்லூரியில் சமையல் கலை நிபுணராக சேர்ந்து கல்வி பயில்கிறார்.
படம் குறித்த தகவல்:
இவருக்கு இந்தியாவின் தலைசிறந்த சமையல்கலை நிபுணராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். தன்னுடைய குடும்பத்தின் எதிர்ப்பை மீறி தன்னுடைய லட்சியத்தை நயன்தாரா அடைந்தாரா? இல்லையா? இதற்கிடையில் அவர் எதிர்கொண்ட சிக்கல்களை எல்லாம் எப்படி சமாளிக்கிறார்? என்பதே படத்தின் மீதி கதை. இது நயன்தாராவின் 75வது படமாகும். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது.
அன்னபூரணி படத்தின் மீது புகார்:
சமீபத்தில் தான் இந்த படம் netflix தளத்திலும் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் மத உணர்வை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், லவ் ஜிகாத்தை ஆதரிக்கும் விதமாக இருப்பதாகவும் மும்பையை சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ்சோலங்கி என்பவர் மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில் அவர், இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் பர்ஜான். இவர் கதாநாயகியை அசைவம் சாப்பிட வைப்பதற்காக ராமர் இறைச்சி சாப்பிடுவார் என்று காண்பிப்பார்கள்.
போலீஸ் எஃப் ஐ ஆர் பதிவு:
பின் அர்ச்சகர் மகளான கதாநாயகி நமாஸ் செய்வது போல காட்சிகளும் வந்திருக்கிறோம். இப்படி இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இந்த படம் வேண்டும் என்று எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் படத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனை அடுத்து போலீசார் அன்னபூரணி படத்தின் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்திருக்கிறது. இதற்கு பட குழுவினர் தரப்பில் என்ன பதில்? வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.