போலீசாரை செருப்பு காலால் தாக்கிய மோகன் லால்.! வலுக்கும் போலீசாரின் கண்டனங்கள்.!

0
731
Mohan-lal
- Advertisement -

தமிழ் சினிமாவில் எண்ணற்ற மலையாள நடிகர்கள் கால் பதித்திருக்கின்றனர். மம்முட்டி தொடங்கி துல்கர் சல்மான் வரை பல மலையாள நடிகர்கள் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயம் தான். அந்த வகையில் மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் லாலும் ஒருவர்.

-விளம்பரம்-
போலீஸ் அதிகாரி மார்பில் மிதிக்கும் காட்சிமோகன்லால் படத்துக்கு எதிர்ப்பு

தமிழில், இருவர், ஜில்லா போன்ற படங்களில் நடித்த மோகன் லால் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். மலையாளத்தில் மோகன்லால், பிருதிவிராஜ், மஞ்சுவாரியர் ஆகியோர் நடித்துள்ள மலையாள படம் லூசிபர். இந்த படத்தை பிருதிவிராஜ் டைரக்டு செய்துள்ளார். இப்படம் கேரளாவில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

- Advertisement -

தமிழ்நாட்டிலும் பல தியேட்டர்களில் திரையிட்டுள்ளனர். படத்தில் மோகன்லால் சண்டை காட்சிகளில் அதிரடி காட்டி இருப்பதாக அவரது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். மோகன்லால் செருப்பு அணிந்த காலுடன் போலீஸ் அதிகாரியின் மார்பில் மிதிப்பதுபோன்ற காட்சி படத்தில் உள்ளது. இதை சுவரொட்டிகளாக அச்சிட்டும் கேரளாவில் ஒட்டி உள்ளனர். 

அதனை கேரள போலீஸ் சங்கம் கண்டித்து முதல்-மந்திரியிடம் புகார் அளித்துள்ளது. போலீசாரின் இந்த புகாரை பலரும் சமூக வலைத்தளத்தில் கேலி செய்து வருகிறார்கள். இருப்பினும் பொதுமக்கள் படத்தை படமாக மட்டுமே பார்க்கின்றனர் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement