தமிழில் எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருபவர் காமெடி நடிகர் யோகி பாபு. இவரது உண்மையான ப்ளஸ்ஸே இவரது உருவ அமைப்பு என்றே கூறலாம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரது தோற்றம் பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி வருகிறது.
தமிழ் சினிமாவில் சந்தானம் மற்றும் வடிவேலுவிற்கு பிறகு காமெடியில் சூரி மற்றும் யோகி பாபு தான் காமெடியில் கலக்கி வருகின்றனர். இவர்கள் இருவர் தான் தற்போது பெரும்பாலான ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருகின்றனர்.
அதிலும் யோகி பாபு சூரியை பின்னுக்கு தள்ளி எங்கேயோ போய்விட்டார். தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களான விஜய் அஜித் ஆகிய இருவருடனும் நடித்து விட்டார். தற்போது மட்டும் யோகி பாபுவின் கைவசம் தற்போது 19 படங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் இவரது நடிப்பில் ஜாம்பி திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் யோகி பாபு பாவாடை சட்டையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த ஆடை கோல மாவு கோகிலா படத்தில் நயன்தாரா அணிந்த ஆடை என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.