ஏற்கனவே பால் பாக்கெட் காணாம போகுது, இதுல அண்டாவா.! சிம்பு மீது போலீஸில் புகார்.!

0
513
Simbhu
- Advertisement -

சிம்பு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகர் சிம்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

-விளம்பரம்-

அதில் தனது படத்திற்கு அதிக செலவில் பேனர் வைப்பதோ , பாலபிஷேகம் செய்வதோ வேண்டாம் என்று கூறியிருந்தார். ஆனால், நேற்று அவர் வெளியிட்ட வீடியோவில் எனக்கு இருப்பது ஒரு சில ரசிகர்கள் தானே அதனால் எனது படத்திற்கு அண்ட கணக்கில் பாலபிஷேகம் செய்யுங்கள் என்று கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : சிம்புவின் பாலாபிஷேக வீடியோ

- Advertisement -

சிம்புவின் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. ஒரு நடிகரே தனது ரசிகர்களிடம் இப்படி கேட்கலாமா என்று பலரும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் நடிகர் சிம்பு மீது தமிழ்நாடு பால் வினியோக சங்கத்தின் தலைவர் பொண்ணு சாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, நேற்று சிம்பு வெளியிட்ட வீடியோவில் விரைவில் வெளியாக இருக்கும் அவரது ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்திற்கு அண்ட கணக்கில் பாலபிஷேகம் செய்யுமாறு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனை அடிப்படையாக வைத்து நடிகர் சிம்பு மீது கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்.

-விளம்பரம்-

மக்களும் பாலபிஷேகம் செய்வதை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், இங்கு குழந்தைகளுக்கே போதுமான பால் கிடைப்பது இல்லை. இதை நங்கள் 2015 ஆம் ஆண்டில் இருந்து சொல்லி வருகிறோம். எங்களுக்கு சிம்பு மீது எந்த ஒரு தனிப்பட்ட விரோதமும் இல்லை. ஆனால், எந்த ஒரு நடிகரும் பேனருக்கு பாலபிஷேகம் செய்யுங்கள் என்று சொன்னது இல்லை.

சமீபத்தில் பேட்ட மற்றும் விஸ்வாசம் படம் வெளியான போது கூட பாலபிஷேகம் செய்த போது ரசிகர் ஒருவர் உயிரிழந்தார். இது போன்ற ஒரு சூழ்நிலையில் சிம்பு பாலபிஷேகம் செய்ய சொல்வது தவறு. இளைஞ்சர்களை சரியான பாதையில் வழி நடத்த வேண்டும்.

அது மட்டுமில்லை எப்போதெல்லாம் ஒரு பெரிய நடிகரின் படம் வெளியாகிறதோ அப்போதெல்லாம் பால் பாக்கெட்டுகள் நிறைய இடங்களில் இருந்து திருடபடுகிறது. இந்நிலையில் சிம்பு அண்டாவில் பாலிபிஷேகம் செய்ய சொல்லி இருக்கிறார் இது திருட்டை மேலும் தான் அதிகரிக்கும். இதனால் இந்த விடயத்திற்கு காவல் துறை தான் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்தெரிவித்துள்ளார் .

Advertisement