ஸ்டாலின், உதயநிதி, தோனி, விஜய்க்கு No – கமல்,சூர்யாவுக்கு ok – ட்விட்டர் Bluetick பின்னணி

0
299
- Advertisement -

முதல்வர் ஸ்டாலின், ரஜினி, விஜய், தோனி என பல பிரபலங்களின் ப்ளூ டிக்கை டீவ்ட்டர் நிறுவனம் நீக்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமான ஒன்றாக திகழ்வது ட்விட்டர். இந்த ட்விட்டரை Elon Musk என்பவர் கடந்த ஆண்டு 44 மில்லியன் கொடுத்து வாங்கி இருக்கிறார். இவர் உலக பணக்காரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவர் ட்விட்டரில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். Iplல் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர் அம்பதி ராயுடு தான் –

-விளம்பரம்-

மேலும், சில மாதங்களாக ட்விட்டரில் பல விதிமுறைகளை விதித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக ப்ளூ டிக் விஷயத்தில் பல மாற்றங்களை செய்து இருக்கிறார். ட்விட்டர் நிறுவனம் நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சமூகத்தில் முக்கியமான இடத்தில் உள்ள நபர்களுக்கு ப்ளூ டிக்கை வழங்கி வருகிறது. இதன் மூலம் போலி கணக்குகளை தவிர்க்கவும், சம்பந்தப்பட்ட நபர்களை எளிதாக கண்டுபிடிக்கலாம்.

- Advertisement -

மேலும், இது ஒரு அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. பல முக்கிய நபர்களுக்கு கூட இந்த டிக் கிடைப்பது கிடையாது. அதோடு ஆக்டிவாக இல்லாத அக்கவுண்ட்கள் மற்றும் அக்கவுண்டில் பெயரை மாற்றினால் ப்ளூ டிக் நீக்கப்படும். அந்த வகையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷனுக்காக திரிஷா, ஜெயம் ரவி இருவரும் தங்களுடைய பெயர்களை மாற்றினார்கள். இதனால் அவர்களுடைய ப்ளூ டிக் பறிபோனது.

இந்நிலையில் தற்போது பல பிரபலங்களின் ப்ளூ டிக் பறி போய் இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின், நடிகர் உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த், விஜய், ராகுல் காந்தி, ரத்தன் டாடா, சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி, கீர்த்தி சுரேஷ், கார்த்தி, சுருதிஹாசன், லோக்கேஷ் கனகராஜ், ஏ ஆர் ரஹ்மான், ஜி வி பிரகாஷ், சந்தோஷ் நாராயணன், கிரிக்கெட் வீரர்கள் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற பல பிரபலங்களின் ப்ளூ டிக் நீக்கப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

இதற்கு காரணம், இவர்கள் ட்விட்டர் சந்தா செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது, மாதம் மாதம் ட்விட்டர் நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கு மேல் மாதம் சந்தா செலுத்த வேண்டும். மாத சந்தா 900 ஆகும். இந்த சந்தா செலுத்த விட்டால் twitter கணக்கு வைத்திருப்பவர்களின் ப்ளூ டிக் நீக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்திருந்தது. அந்த வகையில் சந்தா செலுத்த கொடுத்த காலகெடு முடிவடைந்த நிலையில் தான் பல பிரபலங்களின் ப்ளூ டிக் நீக்கிருக்கிறது.

மேலும், முதல்வருடைய தனிப்பட்ட கணக்கில் இருந்து மட்டுமே ப்ளூ டிக் நீக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவருடைய அலுவலக கணக்கில் கிரே கலர் டிக் இருக்கிறது. அதோடு இந்த சந்தாவை கமல், சூர்யா ஆகியோர் சரியாக கட்டி இருப்பதால் இவர்களுடைய ப்ளூ டிக் நீக்கவில்லை. இனிவரும் காலங்களில் மாத சந்தா கட்டினால் மட்டுமே அதிகாரப்பூர்வ கணக்கு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement