வலிமை படத்துக்கு புதிய தலைவலி தயாரிப்பாளரிடம் 10 கோடி இழப்பீடு கேட்கும் வினோத் – பின்னணி இதான்.

0
605
- Advertisement -

அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் கடந்த மாதம் ரிலீசானது. இயக்குனர் வினோத் அவர்கள் இரண்டாம் முறை அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக உள்ளார். சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள். இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-165.png

இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது. இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது படத்தின் மீதி கதை. மேலும், படம் முழுவதும் அஜித்தின் ஸ்டண்ட் காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் வலிமை திரைப்படம் தமிழகத்தில் இதுவரை 900க்கும் மேல் திரையரங்களில் வெளியாகி உள்ளது. அதோடு தமிழ் சினிமா வரலாற்றில் 100 வருட சாதனையை வலிமை செய்து இருக்கிறது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

வலிமை படம் பற்றிய தகவல்:

மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்று இருந்தாலும் வசூலில் 200 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது ஒரு பக்கமிருக்க, வலிமை படத்தின் கதை, கதாபாத்திரங்கள் எல்லாம் 2016 ஆம் ஆண்டு வெளியான மெட்ரோ படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக ஜேகே கிரியேஷன்ஸ் நிறுவன உரிமையாளர் ஜெயகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் அவர், வசதியான வாழ்க்கைக்காக கொள்ளையடிப்பது, போதைப்பொருள் கடத்துதல், இதில் கதாநாயகன் தம்பி தொடர்பு இருப்பது என வலிமை படத்தில் காட்சிப்படுத்தியிருப்பது எல்லாம் மெட்ரோ படத்தின் கதை என்று கூறியிருந்தார்.

Metro Director About Valimai | மெட்ரோ பட காப்பியா வலிமை

வலிமை படம் மெட்ரோ படத்தின் காப்பி :

அதோடு பிற மொழிகளில் மெட்ரோ படத்தை தயாரிக்க உள்ள நிலையில் அதே அம்சங்களுடன் வலிமை படமாக்கப்பட்டது. காப்புரிமை சட்டத்துக்கு எதிரானது. எனவே வலிமை படத்தை சேட்டிலைட் சேனல், ஓடிடி தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். இதற்கு இடையிலேயே வலிமை படம் மார்ச் 25ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு வந்தது. அதனால் வலிமை படத்தை தடை செய்ய கூடுதல் மனமும் மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் தாக்குதல் செய்யப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் வினோத் தரப்பு பதில் மனுவை வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியம் தாக்கல் செய்தார்.

-விளம்பரம்-

வினோத் தாக்கல் செய்த மனு:

அந்த மனுவில், செய்தித்தாள்களில் அன்றாடம் வரும் சங்கிலி பரிப்பு ,போதைப் பொருள் கடத்தல், கொலை போன்ற செய்திகளின் அடிப்படையில் உருவான வலிமை படத்தின் கதை கதாபாத்திரங்கள் அனைத்துமே வெவ்வேறானவை. இதில் மெட்ரோ படத்தின் கதை, கதாபாத்திரம் பயன்பட்டதாக கூறுவது தவறு. எனவே எந்த காப்புரிமையும் மீறவில்லை. அதுமட்டுமில்லாமல் இணையங்களில் வெளியான விமர்சனங்களில் மற்றவை ஒப்பிட்டு கூறப்பட வில்லை. தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வழக்கு தாக்கல் செய்த ஜெயகிருஷ்ணன் எனக்கு எதிராக 10 கோடி ரூபாய் இழப்பீடு கோரி வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இப்படி இரு தரப்பிலும் வலிமை படம் குறித்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி அளித்த தீர்ப்பு:

பெருந்தொகை மூலதனத்தில் எடுக்கப்பட்ட வலிமை படத்தை ஓடிடி தளங்களில் வெளியிடவும், சாட்டிலைட் உரிமை தொடர்பாகவும் ஒப்பந்தங்கள் கையாகிய உள்ள நிலையில் தடை விதித்தால் பாதிப்பு ஏற்படும் என்பதால் தான் மெட்ரோ பட தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் இந்த மாதிரி மனு தாக்கல் செய்திருக்கிறார். ஆகவே ஜெயகிருஷ்ணன் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என இயக்குனர் வினோத் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இரு தரப்பு மனுவை ஏற்ற நீதிபதி படத்தின் வெளியீட்டிற்கு தடைவிதிக்க மறுத்து பிரதான வழக்கின் விசாரணையை ஏப்ரல் 12 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் வலிமை படம் ஒடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement