சமூக வளைத்தளத்தில் தற்போது இளசுகளின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஷாலு ஷம்மு. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீவிதாவுடன் படம் முழுவதும் தோழியாக நடித்தவர் தான் ஷாலு சம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்திலும் நடித்திருந்தார். இவர் நடித்த படங்களை விட சமூக வலைதளத்தில் இவர் பதிவிட்ட வீடியோக்கள் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஷாலு ஷம்மு ஆண் நண்பர்களுடன் நடனமாடும் இரண்டு விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. எப்படியும் பட வாய்ப்புகளுக்காக தான் அம்மணி இது போன்ற புகைப்படங்களையும் விடீயோக்களையும் பதிவிட்டு வந்தார்.
அதே ஷாலு ஷம்முவிற்கு ரசிகர்கள் அடிக்கடி மெசேஜ் அனுப்பியும் வருகின்றனர். அந்த வகையில் சென்னையை சேர்ந்த ரசிகர் ஒருவர், என்னுடைய பெயர் ராஜ்குமார் , சென்னையில் இருக்கிறேன். நாங்கள் நண்பர்கள் 5 பேர் pubg விளையாடுகிறோம். ஆனால், எங்களிடம் அந்த கேமை ஆட சரியான மொபைல் இல்லை/ iphone xr மொபைலில் தான் இந்த கேம் நன்றாக வரும். எனவே, எங்களுக்கு உதவுவீர்கள் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ள ஷாலு ஷம்மு இன்றைய காமெடி என்று பதிவிட்டுள்ளார். ஆனால், அந்த ரசிகரின் பெயரை ஷாலு ஷம்மு மறைத்தே அந்த ஸ்க்ரீன் ஷாட்டை வெளியிட்டுள்ளார்.
இதனை கண்டு பலரும் கொஞ்சம் ஷாக்காகி தான் இருப்பார்கள். ஷாலு ஷம்மு தற்போது இருட்டு அறையில் முரட்டுகுத்து படத்தின் இரண்டாம் பக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக் நடிக்க மறுப்பு தெரிவித்ததால் தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பக்கத்தில் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயகுமாரே ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தில் யாஷிகா நடிக்க மறுத்ததால் தற்போது அவருக்கு பதிலாக ஷாலு ஷம்மு கமிட் ஆகி நடித்து வருகிறார்.