7-ஆம் தேதி தமிழகத்துக்கு “Red Alert”..! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை! ரெட் அலர்ட் என்றால் என்ன ?

0
271
Rainfall

தமிழகம் அதன் சுற்று பகுதிகளில் நேற்று (அக்டோபர் 3) இரவு பரவலாக மழை பெய்த்தது. தமிழகத்தில் உள்ள சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி 25 செ.மீ மழை பெய்யும் என்று தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

flood
flood

ஏற்கனவே பாண்டிச்சேரியில் பெய்து வரும் கன மழையால் ஒரு சில பகுதிகளில் இருக்கும் மக்கள் குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது கடலோர பகுதிகளில் இருக்கும் மக்களை பீதியடைய செய்துள்ளது.

ரெட் அலர்ட் என்றால் என்ன ?

* குறைந்த நேரத்தில் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்பிருக்கும் நிலையில் இந்த ரெட் அலர்ட் பிறப்பிக்கபடுகிறது.

* மிக மிக மோசமான வானிலை நிலவும் என்பதை குறிக்க ரெட் அலர்ட் அறிவிக்கப்படும்

chennai

* ரெட் அலர்ட் அறிவிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் உயிர்களையும், உடமைகளையும் பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* சாலை போக்குவரத்து பாதிக்கபடும், மின்சாரம் துண்டிக்கப்படும் இதனால் குறிப்பாக கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர வேண்டும்.

* அதே போல பொது மக்கள் உள்ளூர் நிர்வாகம் மற்றும் அவசர நிலையை எதிர்கொள்ளும் அமைப்புகளின் அறிவுறுத்தல்களை கேட்க வேண்டும்.