‘அறிவு இந்தக் காரணத்தாலதான் செஸ் ஒலிம்பியாட்டில் கலந்துக்கல’ – அவருக்கு பதிலாக கிடாக்குழி மாரியம்மாள்.

0
402
dhee
- Advertisement -

1924ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் செஸ் விளையாட்டைச் சேர்க்க பணிகள் நடைபெற்றது. எனினும் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. தொழில்முறை வீரர்கள் மற்றும் கேளிக்கைக்காக விளையாடும் நபர்களுக்கு இடையே வேறுபாடு அறிய முடியாது என்பதால் செஸ் போட்டி அப்போது ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து 1924ஆம் ஆண்டு முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டி அப்போது அங்கீகரிக்கப்படவில்லை. எனினும் அந்தப் போட்டியின் கடைசி நாளன்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு(FIDE) 1924ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இந்த நாள் தான் சர்வதேச செஸ் நாளாக அறிவிக்கப்பட்டது.

-விளம்பரம்-

சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) 1927ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தியது. 1927ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டியில் தொழில்முறை வீரர்கள் விளையாட அனுமதிக்கப்படவில்லை. ஆகவே 1927 மற்றும் 1928ஆம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் உலகின் தலை சிறந்த வீரர்கள் இடம்பெறவில்லை. அதன்பின்னர் தொடர்ந்து ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செஸ் ஒலிம்பியாட் நடைபெற்றது. எனினும் இரண்டாம் உலகப் போரின் போது இந்த ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்படவில்லை.

- Advertisement -

இதையும் பாருங்க : விஜய் அஜித் கூடையும் நடிச்சிருக்கேன் – வாய்ப்பில்லாமல் தவித்து வரும் காதல் பட நடிகரின் பேட்டி.

சோவியத் ரஷ்யா ஆதிக்கம் :-

1952ஆம் ஆண்டு நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் முறையாக சோவியத் ரஷ்யா பங்கேற்றது. அதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் சோவியத் ரஷ்யா அணி 1990ஆம் ஆண்டு வரை 2முறை தவிர ஒலிம்பியாட் போட்டிகளும் வெற்றி பெற்றது. 1976ஆம் ஆண்டு ஹைஃபா ஒலிம்பியாட் போட்டியை சோவியத் ரஷ்யா புறக்கணித்தது. 1978ஆம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சோவியத் ரஷ்யா இரண்டாம் இடம் பிடித்தது. 1992ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா பிரிந்து ரஷ்யாவாக மாறிய பிறகு முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது முதல் 2002 ஆம் ஆண்டு வரை ரஷ்ய அணி 6 முறை செஸ் ஒலிம்பியாட் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

-விளம்பரம்-

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கிவைத்தார் பிரதம் மோடி :-

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், ஜூலை 28 ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 1924-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த கவுரவமிக்க போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன. இதுவரை நடத்தப்பட்ட எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையும் விட இது அதிக எண்ணிக்கையையாகும். 6 அணிகளில் 30 வீரர்களை கொண்டு இந்த போட்டியில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அணியை இந்தியா களமிறக்குகிறது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள பிரமாண்ட விழாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

எஞ்சாயி எஞ்சாமி பாடலை பாட ஏன் அறிவு வரவில்லை :-

பிரம்மாண்ட செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் எஞ்சாயி எஞ்சாமி பாடலை பாடகி தீயுடன் சேர்ந்து பாடிய சந்தோசத்தில் இருக்கிறார் பாடகி கிடாக்குழி மாரியம்மாள். கர்ணன் படத்தில் இடம்பெற்ற கண்டா வரச்சொல்லுங்க கம்பீரக் குரலுக்கு சொந்தக்காரரான மாரியாம்மாளை செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பாடிய அனுபவம் குறித்து பேசினோம். நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் எஞ்சாயி எஞ்சாமி பாடலை பாட ஏன் அறிவு வரவில்லை என்பதே பலரின் கேள்வியாக இருந்தது. அதுகுறித்து கிடாக்குழி மாரியம்மாள் கூறியது.சந்தோஷ் நாராயணன் சார்தான் போன் பண்ணி கூப்பிட்டாங்க. அறிவு தம்பியும் தீயும்தான் ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாட்டைப் பாடினாங்க. இது பயங்கரமான ஹிட் பாடல் அறிவு ஏன் வரலைன்னு கேட்டேன். அறிவு அமெரிக்கா போயிருக்காரும்மா. திடீர்னு இந்த நிகழ்ச்சியை வச்சிருக்காங்க. அவரால வரமுடியலைன்னு சொன்னாங்க என மாரியம்மாள் நம்மிடம் தெரிவித்தார்.

பிரதமர் மற்றும் முதலமைச்சர் முன் பாடியதில் சந்தோசமாக இருக்கிறது :-

பிரதமர், முதல்வர் முன்னாடி பாடினது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. இவ்ளோ சீக்கிரம் இந்த வாய்ப்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை. ஊர்லருந்து எல்லோரும் போன் பண்ணி வாழ்த்தினாங்க. எனக்கு, இப்போ 53 வயசாகுது. 50 வயசுலதான் சினிமா வாய்ப்பே வந்தது. அதுக்கு முன்னாடி, “திமுகவுக்காக நானும், என் கணவரும் நிறைய பாடல்களை இயற்றிப் பாடியுள்ளோம். எங்க குடும்பமே திமுக குடும்பம். ஒருமுறை ஓப்பன் லாரியில் நின்று பாடும்போது கலைஞர் அய்யாவும் ஸ்டாலின் சாரும் காரை நிறுத்தி எங்களுக்கு கைகொடுத்துட்டுப் போனாங்க. அப்போ, ஸ்டாலின் சார் இளைஞரணி செயலாளரா இருந்தார். இப்போ, அவர் முதல்வரானதுக்கு அப்புறம் அவர் முன்னாடி பாடினது வாழ்க்கையில மறக்கவே முடியாதது.

தீக்குதான் நான் இந்த பாடலை பாடணும்னு ஆசை :-

நான் இந்த நிகழ்ச்சியில பாடணும்னு தீக்கு ரொம்ப ஆசை. அதனால்தான், என்னை வரவச்சாங்க. 23-ம் தேதியே சென்னை வந்துட்டேன். நிகழ்ச்சியில் பாடும்போது மறந்துடுவேன்னு முன்னாடியே என்னை பாடவச்சி ரெக்கார்ட் பண்ணிக்கிட்டாங்க. அந்தப் பாட்டுல ஒப்பாரி வரிகள் வருமில்லையா. அதையும் அறிவுதான் பாடினாப்ல. அந்தக் குரல் எனக்கு அப்படியே செட்டாகும்னு பாட வச்சாங்க. அவங்க எதிர்பார்த்த மாதிரியே செட்டும் ஆச்சு. அறிவு பாடிய ராப் வரிகளுடன் என்னுடையதையும் சேர்த்து போட்டார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடியே பாடியதில் ரொம்ப சந்தோஷம் என்றார் மகிழ்ச்சியுடன்.

Advertisement