வாழை படம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018ல் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
முதல் படமே இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. இந்த படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ படமும் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த படம் ‘மாமன்னன்’. இந்த படமும் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை அடுத்து தற்போது சோசியல் மீடியா முழுவதும் மாரி செல்வராஜின் வாழை படம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
வாழை படம்:
தற்போது மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்து இருக்கும் படம் ‘வாழை’. இந்த படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மாரி செல்வராஜ், தன் இளம் வயதிலிருந்து சந்தித்த ஜாதி, மதம் பாகுபாடுகளை மையமாக வைத்து வாழை என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
படம் குறித்த தகவல்:
சமீபத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலருமே மாரி செல்வராஜை நேரில் சந்தித்து பாராட்டி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சில பிரபலங்கள் சோசியல் மீடியாவிலும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, பாரதிராஜா, மணிரத்னம், வெற்றிமாறன், ராம், மிஸ்கின், நெல்சன், சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் போன்ற பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
ஸ்டாலின் பதிவு:
மேலும், பிரபலங்களை தாண்டி அரசியல் கட்சித் தலைவர்களான திருமாவளவன், சீமான், ராமகிருஷ்ணன் ஆகியோரும் மாரி செல்வராஜின் வாழை படத்தை பார்த்து பாராட்டி இருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாழை படத்தை பார்த்து பாராட்டி பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும், அவர்களின் வலியையும் பேசும் வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன்.
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் #வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி @mari_selvaraj அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்💐
— M.K.Stalin (@mkstalin) September 2, 2024
பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார்…
வாழை குறித்து சொன்னது:
படைப்பாளி மாரி செல்வராஜுக்கு அன்பின் வாழ்த்துகள். பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி! பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்! தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜுக்கு மீண்டும் வாழ்த்துகள் என்று கூறி இருக்கிறார்.