கடந்த சில தினங்களுக்கு முன்னர் திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய விஷயம் சர்ச்சையானது. மன்சூர் அலிகான் எதிராக கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும் நடிகர் சங்கம் மன்சூர் அலிகான் இந்த செயலை வன்மையாக கண்டித்ததோடு அவரது இந்த செயல் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவரது கருத்திற்கு மனம் வருதி உண்மையாக பொது மன்னிப்பு கூறும் வரை அவரை சங்கத்திலிருந்து ஏன் தற்காலிகமாக நீக்கம் செய்யக்கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் கருத்துவதாகவும் தெரிவித்து இருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து பேசிய குஷ்பூ ’இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சை கருத்துகள் குறித்து ஆணையத்தின் மூத்த உறுப்பினர்களிடம் கூறியுள்ளேன். மன்சூர் அலிகான் மீது மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்’என கூறி இருந்தார். இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையமானது நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. சட்டப்பிரிவு 509 மற்றும் இது தொடர்பான இதர பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பின்னணிப் பாடகி சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில், ‘மன்சூர் அலிகான் பேச்சுக்கு எதாவது ஒரு யூனியன் ரெட் கார்டு கொடுப்பது, அவரை சங்கத்தில் இருந்து நீக்குமா அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது என எதாவது செய்வார்கள் என எதிர்ப்பார்த்தேன். ஆனால், 2-3 நாட்களாக அப்படி எதுவும் நடக்கவில்லை. அவர் ஊடகங்கள் முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மட்டும்தான் கூறினார்கள்.
இதுவே மாறாக என் விவகாரத்தில், பத்ம விருது பெற்ற பாடலாசிரியர் ஒருவரால் நான் துன்புறுத்தப்பட்டேன் எனக் கூறியதற்காக நான் உடனடியாகத் தடை செய்யப்பட்டேன். 5 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தத் துறையில் பல ‘வீரர்கள்’ அவரைப் பற்றி பேசியதற்காக என்னைப் பற்றி அவதூறு பரப்பி வருகின்றனர்’சில ஆண்கள் வெளிப்படையாக கேவலமாக இருப்பதில் பெருமை கொள்கிறார்கள்.
‘நான் ஆம்பல என்னால முடியும். உன்னால முடிஞ்சா நீயும் இப்படி இரு’ இந்த மக்கள் ஒருபோதும் மாற மாட்டார்கள்’ என்றும் கூறியுள்ளார். அதே போல அவங்க எவ்ளோ வெள்ளையாக இருக்கிறார். அவங்கள தொட்டு நடிக்கலாம்னனு ஆசைப்பட்டேன் என்று ஜோக் அடிப்பார்கள். அன்புக்கும் ஆசைக்கும் என்ன வித்யாசம், அனுஸ்காவிற்கும் ஆயாவிற்கும் என்ன வித்யாசம் அந்த வித்யாசம் தான் என்று சொல்வார்கள்.. அதற்கு எல்லாரும் கைதட்டுவார்கள்’ என்றும் கூறியுள்ளார்.
சின்மயி எப்படி பேசி இருப்பது ரஜினியை தான் என்று பலரும் கூறி வருகிறார்கள் சமீபத்தில் நடைபெற்ற ஜெயிலர் படத்தின் விழாவில் தமன்னாவுடன் இயக்குனர் என்னை பேசவே விடயவில்லை என்று ரஜினி பேசி இருந்தார். அதேபோல லிங்கா படத்தின் விழா ஒன்றில் ரஜினி குறித்து பேசிய சந்தானம் ‘அன்புக்கும் ஆசைக்கும் என்ன வித்யாசம், அனுஸ்காவிற்கும் ஆயாவிற்கும் என்ன வித்யாசம் அந்த வித்யாசம் தான் என்று சொன்னதாக பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.