‘பெண்கள் இதை தான் கேட்கிறார்கள்’ மகளிர் தினத்தில் வைரமுத்து போட்ட பதிவு. கவிதை நடையிலேயே பதிலடி கொடுத்த சின்மயி

0
855
Chinmayi-vairamuthu
- Advertisement -

மகளிர் தினத்தில் வாழ்த்து தெரிவித்து வைரமுத்து போட்ட பதிவை கேலி செய்து சின்மயி போட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் சின்மயி . இவர் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற ஒரு தெய்வம் படத்தில் பூவே என்ற பாடல் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதனை தொடர்ந்து இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே பணிப்போரே ஏற்பட்டது. அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது. மேலும், இந்த மீடு விவகாரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

இதனைத்தொடர்ந்து வைரமுத்து யாருடைய படங்களில் ஒப்பந்தம் ஆனாலும் ஏன் இந்த மாதிரி? ஆளுக்கெல்லாம் வாய்ப்பு தருகிறீர்கள்? இவரை எல்லாம் படத்தில் வைக்காதீர்கள்? என்று சின்மயி விமர்சித்து டீவ்ட் போட்டு வருகிறார். மேலும், இந்தப் பிரச்சனையில் இருந்து சின்மயி பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அடிமைத்தனம், பெண்கள் சுதந்திரம் போன்ற பெண்கள் தொடர்பான விஷயங்களுக்கு சுதந்திரம் கருத்து தெரிவித்து வருகிறார்.

அதே போல இத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் வைரமுத்துவை பற்றி சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில்,

-விளம்பரம்-

மாலையும் நகையும் கேட்கவில்லை பெண்; மதித்தல் கேட்கிறாள் வீடும் வாசலும் விரும்பவில்லை பெண்; கல்வி கேட்கிறாள் ஆடம்பரம் அங்கீகாரம் ஆசைப்படவில்லை பெண்; நம்பிக்கை கேட்கிறாள் கொடுத்துப் பாருங்கள்; அவளே பாதுகாப்பாள் ஆண்களையும் உலக மகளிர் திருநாள் வாழ்த்து’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

வைரமுத்துவின் இந்த பதிவை விமர்சித்து உள்ள சின் மயி ‘அவ்வீட்டு வாசலை தாண்டும்பொழுது காம வெறியர்களை கேட்க்கவில்லை பெண்; பாதுகாப்பு கேட்க்கிறாள். பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்டும்பொழுது அவதூரு கேட்க்கவில்லை பெண்; நியாயம் கேட்கிறாள். பெண் விடுதலை மற்றும் பாதுகாப்பு பற்றி எல்லாம் இவர் பேசுவதை என்னால் தாங்க முடிவில்லை’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement