அன்னிக்கி நான் அழுதுட்டே வந்தேன், இப்போ மட்டும் அந்த ஆளு என்ன பேட்டி எடுத்தா – 5 ஆண்டுக்கு முன் அளித்த பேட்டி குறித்து சின்மயி

0
266
Chinmayi
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் சின்மயி . இவர் ஏ.ஆர். ரகுமான் இசையில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதனை தொடர்ந்து இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. மேலும், இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் பணியாற்றி இருக்கிறார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே இடையே பணிப்போரே நடந்து கொண்டு இருக்கிறது. அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது. மேலும், இந்த மீடு விவகாரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

வைரமுத்து-சின்மயி சர்ச்சை:

அதுமட்டும் இல்லாமல் கவிஞர் வைரமுத்து எது செய்தாலும் அவரை குறித்து சின்மயி விமர்சித்துப் பேசி வருகிறார். அந்த வகையில் வைரமுத்து யாருடைய படங்களில் ஒப்பந்தம் ஆனாலும் ஏன் இந்த மாதிரி? ஆளுக்கெல்லாம் வாய்ப்பு தருகிறீர்கள்? இவரை எல்லாம் படத்தில் வைக்காதீர்கள்? என்று சின்மயி விமர்சித்து டீவ்ட் போட்டு வருகிறார். இவரை அடுத்து சில பெண்களும் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து இருந்தார்கள். ஆனால், அவர் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.

சின்மயி அளித்த பேட்டி:

அதற்கு காரணம், மு. க. ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக வைரமுத்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால், இதை எல்லாம் வைரமுத்து கண்டு கொள்ளாமல் இருக்கிறார். இந்நிலையில் சின்மயி சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் மீடு விவகாரம் குறித்து கூறியிருந்தது, பாண்டே எல்லாம் என்னை இன்டர்வியூ எடுத்தபோது கதறி கதறி அழுது கொண்டுதான் வெளியே வந்தேன். கேள்வி கேட்டுவிட்டு அவர் பாட்டு மொபைலை நோண்டிக் கொண்டிருந்தார். நான் கத்தி கத்தி பதில் சொல்லியும் யாரும் காதில் வாங்கவில்லை.

-விளம்பரம்-

வைரமுத்து குறித்து சொன்னது:

இப்ப இருக்கிற சின்மயி அப்ப இருந்திருந்தால் போனை வைத்துவிட்டு நான் பதில் சொல்வதை கேட்கிறீர்களா? இல்லை நான் கிளம்பட்டுமா? என்று கேட்டிருப்பேன். அந்த அளவிற்கு ஆரம்பத்தில் என்னை எல்லோருமே டார்கெட் செய்திருந்தார்கள். இப்ப இருக்கிற தைரியம் அப்போ என்னிடம் இல்லை. நக்கீரன் எல்லாம் மோசமாக என்னை பற்றி பேசி இருந்தார். எனக்கும் அவருக்கும் நிறைய வாக்குவாதம் எல்லாம் நடந்தது. கடைசியில் நான் பட்ட கஷ்டம் நீ ஒரு நாள் படுவ என்று சாபம் விடும் அளவுக்கு திட்டிவிட்டு வந்து விட்டேன்.

மீடு குறித்து சொன்னது:

அதற்குப்பின் சில வருடங்கள் கழித்து என்னை விமர்சித்தவர்களே, நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டீர்கள் என்பது எங்களுக்கு புரிகிறது என்று மெசேஜ் எல்லாம் அனுப்புகிறார்கள். நிறைய பேருக்கு மீடு என்ற விவகாரம் தெரியவே இல்லை. அது பற்றி பெரிதாக தெரிவதற்கு முன்பே பலருமே அடக்கி விட்டார்கள். வைரமுத்து குறித்து என்னிடம் நிறைய ஆதாரங்கள் இருக்கிறது. ஆனால், என்னை பற்றி தவறாக வந்த விமர்சனங்களுக்கு ஆதாரம் இருக்கிறதா? என்று ஆவேசமாக பேசியிருக்கிறார்.

Advertisement