உங்கள் நண்பர் ‘மீ டூ’ புகழ் வைரமுத்து மீது எப்ப நடவடிக்கை எடுப்பீங்க – முதல்வரிடம் சின்மயி கேள்வி.

0
1674
Chinmayi
- Advertisement -

சில ஆண்டுகளுக்கு முன் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே பணிப்போரே ஏற்பட்டது. அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது. மேலும், இந்த மீடு விவகாரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள்.இதனைத்தொடர்ந்து வைரமுத்து யாருடைய படங்களில் ஒப்பந்தம் ஆனாலும் ஏன் இந்த மாதிரி? ஆளுக்கெல்லாம் வாய்ப்பு தருகிறீர்கள்? இவரை எல்லாம் படத்தில் வைக்காதீர்கள்? என்று சின்மயி விமர்சித்து டீவ்ட் போட்டு வருகிறார்.

-விளம்பரம்-
Chinmayi-vairamuthu

இந்த நிலையில், பிரபல பாடகி சின்மயி, 17 பெண்கள் பாலியல் புகார் கொடுத்த கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலினிடம் வலியுறுத்தி இருக்கிறார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் சின்மயி. அப்பதிவில், “இந்தியாவில் எந்த மாநிலத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழும்போதும், நீங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறீர்கள்.

- Advertisement -

அரசியல் கட்சித் தலைவர்கள் பேசும்போது மாற்றம் வரும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது. ஆனாலும், பாலியல் சுரண்டல்கள், தொல்லைகள் குறைந்தபாடில்லை. போக்ஸோ உள்ளிட்ட சட்டங்கள் இருந்தும், அனைத்து துறையிலும் பாலியல் குற்றச்சாட்டு எழத்தான் செய்கிறது.குறிப்பாக, திரைத்துறையில் இன்றும் பாலியல் குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. உங்கள் நண்பரும், ஆதரவாளருமான கவிஞர் வைரமுத்துவின் மீது 17-க்கும் மேற்பட்ட பெண்கள் புகாரளித்தும், உங்கள் பாதுகாப்பில் அவர் மகிழ்ச்சியுடன்தான் இருக்கிறார்.

இதனால், அவர் குறித்து பெண்கள் மேலும் பேச முடியாதவாறு செய்கிறார். தமிழகத்தில் வேறு அரசியல்வாதிகளே இல்லை என்பதுபோல், உங்கள் கட்சி தொடர்ந்து அவரை முன்னிலைப்படுத்துகிறது. எங்கள் அனைவரின் திறமையைவிட வைரமுத்து திறமை பெரிதொன்றும் இல்லை. இது உங்கள் கண் எதிரே நடக்கிறது. எனவே, தேவையானதை செய்யுங்கள். அப்போதுதான், தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும்.

-விளம்பரம்-

எனது துறையில் இதுபோன்றவர்கள் இனி வரக்கூடாது என்பதற்காக நான் பேசுகிறேன். ஆனால், அவரால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் அவரது அரசியல் தொடர்புகளுக்காக வெளியே பேச பயப்படுகிறார்கள். எனது ஊடகத்தில் பெண் குழந்தைகள் எல்லாம் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுங்கள். போக்ஸோ, ஐ.சி.சி. உள்ளிட்ட அமைப்புகள் சரியாக செயல்பட தயவு செய்து ஆவண செய்யுங்கள்.

எங்கள் துறையில் அனைத்து இடங்களிலும் பாலியல் அத்துமீறல்களை தடுக்க வழிவகை செய்யுங்கள். தொலைக்காட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சியை டி.வி.யில் தொகுத்து வழங்கியபோது ரமேஷ் பிரபா குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அவரது பெயரும் வெளியானது. எனவே, அனைத்துக்கும் ஆவண செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார். 

Advertisement