டப்பிங் யூனியின் காம்ப்வுன்டுக்கு உள்ள கூட சேர்க்க மாட்டோம் – ராதாரவி பேச்சுக்கு சின்மயி பதிலடி.

0
119
- Advertisement -

ராதாரவியின் விமர்சனத்திற்கு சின்மயி பதிலடி கொடுத்துள்ளார். டப்பிங் யூனியனுக்கு நீண்ட காலமாக தலைவராக இருந்தவர் ராதாரவி. இதனால் இந்த மாதம் 17 ஆம் தேதி டப்பிங் யூனியனுக்கு தலைவர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் ராதாரவியும், டப்பிங் யூனியன் பொறுப்புகளில் இருப்பவரும், சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தவருமான ராஜேந்திரனும் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

ராஜேந்திரனுக்கு யூனியன் உறுப்பினர்கள் மத்தியில் நிறைய செல்வாக்கு இருப்பதால் அவர் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து சமீபத்தில் ராஜேந்திரன் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர், நான் அண்ணன் ராதாரவியை எதிர்த்து போட்டியிடவில்லை. அவர் தலைவர் பதவிக்கு போட்டியிடாததை பயன்படுத்தி பொறுப்பில்லாத சில பேர் இந்த பதவிக்கு வர முயற்சி செய்தார்கள். இதனால் நான் தலைவர் பதவியில் போட்டியிட தயாரானேன். ஆனால், அந்த சிலருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

- Advertisement -

மேலும், சின்மயி ஒரு சாதாரண உறுப்பினராக தான் சேர்ந்தார். சந்தா புதுப்பிக்க சொன்னபோது, நான் லைஃப் மெம்பர், சந்தா புதுப்பிக்க தேவையில்லை என்று சொன்னார். அவர் சந்தா செலுத்தாததால் உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதனால் இந்த விவகாரம் கோர்ட் வரைக்கும் போனது. நீதிமன்றமும் சங்க நடவடிக்கை சரி என்று தீர்ப்பும் தந்தது. ஆனால், சின்மயி சொன்ன ஒரு பொய்யால் யூனியன் நடத்திய இந்த வழக்கில் சில லட்சங்கள் செலவானது தான் மிச்சம். அதோடு அவர் சங்கத்தில் உறுப்பினராக இல்லை. ஆனால், அவரை டப்பிங் யூனியனில் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியது தவறு என்றெல்லாம் பேசி இருந்தார்.

ராதாரவி பேட்டி:

இப்படி ராஜேந்திரன் பேசியிருந்தது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. இதை அடுத்து லியோ படத்தில் சின்மயி குரல் பயன்படுத்தியதற்கு லோகேஷ், டப்பிங் யூனியனுக்கு 50000 செலுத்தி இருந்தார். தற்போது யூனியன் விவகாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் ராதாரவி அவர்கள் சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்து, நான் என்னுடைய வாழ்க்கையில் எதிரிகளை பார்த்திருக்கிறேன். ஆனால், துரோகிகளை இப்போது தான் பார்க்கிறேன்.

-விளம்பரம்-

கண்டிப்பாக எங்களுடைய அணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை இருக்கிறது.லியோ படத்திற்கு சின்மயி குரல் கொடுத்த விவகாரம் அனைவரும் அறிந்ததே. என்னுடைய கோரிக்கையை ஏற்று தான் லோகேஷ் கனகராஜ் அபராதம் செலுத்தினார். லோகேஷ் கனகராஜ் தான் அபராதம் கொடுக்க வேண்டும் என்பதில்லை. அவருக்கு விதிமுறைகள் தெரியாது.நான் போன் பண்ணி சொன்னதுமே அவர் ஒற்றுக் கொண்டார். யூனியனுக்கு வந்து பணமும் கொடுத்தார். அதேபோல சின்மயி மீண்டும் டப்பிங் யூனியனுக்கு வந்தால் நிச்சயமாக அந்த காம்பவுண்டுகள் கூட சேர்க்க மாட்டோம். அவருக்கு இந்த டப்பிங் யூனியனில் வர தகுதியே இல்லை என்று கூறி இருந்தார்.

சின்மயி பதிலடி :

இப்படி ஒரு நிலையில் ராதாரவியின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ள சின்மயி’மலேஷிய நாடு வழங்காத போலி டத்தோ பட்டத்த தானே சூட்டிகிட்டு, டத்தோ வளாகம்னு பேரு வெச்ச அந்த டப்பிங் யூனியன் காம்பவுடு, பில்டிங் எல்லாமே இல்லீகல்னு சென்னை கார்ப்பரேஷன் சீல் வெச்சு தரமட்டம் ஆக்கிடுச்சே. டப்பிங் யூனியன் மெம்பர்ஸோட ஒழைப்புலெருந்து இவங்க எடுத்த காசு மண்ணோட போச்சு. இவரைபோல ஒரு அப்யூசிவ் ஆளு இருக்கும் எந்த காம்பவுண்ட்லயும் எனக்கு போகணும்ன்ற அவசியமில்ல’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement