‘தேசிய மொழி சர்ச்சை’ – அது ராஷ்ட்ர பாஷை இல்லை சார் – அஜய் தேவ்கானுக்கு பாடகி சின்மயி சூப்பரான பதிலடி.

0
727
Chinmayi
- Advertisement -

அஜய் தேவ்கான் டீவ்ட்டிற்கு பாடகி சின்மயி கொடுத்து உள்ள பதிலடி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் யாஷ் நடித்து இருந்த படம் கே ஜி எப். இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது கே ஜி எஃப் 2 படம் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். மேலும், முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் 2 மடங்கு மாசாக இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படம் இந்தியா முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருந்தது.
அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தை பார்த்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் பாராட்டி இருந்தார்கள். இதுவரை கே ஜி எஃப் 2 படம் 800 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படி கேஜிஎஃப் படத்தின் பிரம்மாண்ட வெற்றி குறித்து கன்னட நடிகர் சுதீப் கூறியிருப்பது, கன்னடத்தில் ஒரு பேன் இந்தியன் படம் எடுத்திருப்பதாக சொல்கிறீர்கள்.

- Advertisement -

கன்னட நடிகர் சுதீப் கூறியது:

அதில் ஒரு சிறிய மாற்றம் செய்ய விரும்புகிறேன். இந்தி தேசிய மொழி அல்ல. பாலிவுட்டிலும் pan-india படம் எடுக்கிறார்கள். அதை தெலுங்கு, தமிழில் டப் செய்து வெளியிட்டாலும் வெற்றி பெறுவதில்லை. இன்று நாங்கள் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் படம் எடுத்து இருக்கிறோம் என்று கூறியிருந்தார். இப்படி சுதீப் கூறியிருந்த கருத்து சோஷியல் மீடியாவில் வைரலானது. இதனையடுத்து சுதீப்பின் கருத்துக்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் கூறியது,

நடிகர் அஜய் தேவ்கான் கூறியது:

உங்களை பொறுத்தவரை இந்தி தேசிய மொழி இல்லை. அப்போது ஏன் உங்கள் தாய்மொழி படத்தை இந்தியில் டப் செய்கிறீர்கள். இந்தி எப்போதும் எங்களுக்கு தாய்மொழி மற்றும் தேசிய மொழி தான் என்று கூறியிருக்கிறார். இப்படி அஜய் தேவ்கான் போட்டிருந்த பதிவு சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக உள்ளது. பலரும் இது குறித்து கமெண்ட்ஸ் போட்டு இருந்தார்கள். இதனைத் தொடர்ந்து கிச்சா சுதீப், அஜய்தேவ் கானுக்கு பதில் டீவ்ட் போட்டிருந்தார். அதில் அவர், நான் அந்த இடத்தில் வேறு ஒரு தோணியில் பேசியிருந்தேன்.

-விளம்பரம்-

கிச்சா சுதீப் கொடுத்த பதிலடி:

அஜய்தேவ்கான் சார் உங்களுக்கும் எனக்கும் என்ன பிரச்சனை? இதை இங்கேயே முடித்துக் கொள்வோம். நீங்கள் இந்தியில் போட்ட டீவ்ட் எனக்கு புரிந்தது. இதை நான் கன்னடத்தில் பதில் அளித்திருந்தால் உங்கள் நிலைமை என்ன ஆயிருக்கும்? என்பது போல கமெண்ட் போட்டு இருந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. பின் நெட்டிசன்கள் பலரும் நடிகர் அஜய் தேவ்கனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள். அதில் சிலர் தென்னிந்திய நடிகர் பாக்ஸ் ஆபீஸ் ஸ்டார்கள் என்றும் பாலிவுட் நடிகர்கள் எல்லோரும் பான் மசாலா ஸ்டார்கள் என்றும் சோசியல் மீடியாவில் விமர்சித்து வருகின்றார்கள்.

பாடகி சின்மயி போட்ட டீவ்ட்:

மேலும், அஜய் தேவ்கான் போட்ட டீவ்ட்க்கு பாலிவுட்டில் பலரும் அமைதியாக இருக்கின்றனர். ஆனால், தென்னிந்தியாவில் அரசியல் தலைவர்கள் முதல் நடிகர்கள், நெட்டிசன்கள் என பலரும் அஜய் தேவ்கானை கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் பாடகி சின்மயி தனது டீவ்ட்டர் பக்கத்தில் கூறியிருப்பது, ராஜ் பாஷா, ராஷ்ட்ர பாஷை இல்லை சார். ஏன் இந்த இந்தி தேசிய மொழி என்கிற பஞ்சாயத்து அடிக்கடி எழுகிறது? யாருக்கு தேவைப்படுகிறதோ அவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் பேசலாம் என்ற கருத்தை பதிவிட்டிருக்கிறார்.

Advertisement