விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, இனி தமிழ் செல்விக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அவளைப் பற்றி பேசக்கூடாது என்று கோபமாக பேசிவிட்டு சென்றார். அப்பத்தா, தன் மகனையும் பேரணையும் நினைத்து ரொம்பவே எமோஷனலாக அழுதார். பின் தன்னுடைய வீட்டிற்கு வந்த தமிழை பார்த்து அவருடைய அப்பா, அம்மா பதறினார்கள். அப்போது தமிழ், எனக்கும் அந்த குடும்பத்திற்குமான உறவு அறுந்துவிட்டது என்று சொன்னார். இதைக் கேட்டு தமிழ்செல்வியின் அம்மா ஷாக் ஆகி நின்றார்.

சாவித்திரி, தாமரை இருவரும் மீண்டும் வீட்டிற்கு வந்ததை நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறீர்கள். அப்போது வந்த ஈஸ்வரி, நீங்கள் கிளம்பவில்லையா? என்று கேட்டார். சாவித்திரி கோவப்பட்டு ஈஸ்வரிடம் சண்டைக்கு போனார். இன்னொரு பக்கம் சேதுவை சேதுபதி வழிமறித்து நீதிமான் பேசி இருந்தார். அப்போது நீதிமான், உங்கப்பன் உடைய பதவி பறிக்கப்பட்டது. உங்க அப்பன் மட்டும் கொலை செய்தது உறுதியானால் காலம் முழுக்க கம்பி எண்ண வேண்டியதுதான் என்று ராஜாங்கத்தை மோசமாக பேசிக் கொண்டிருக்கிறான். இதனால் கோபப்பட்ட சேது, என் அப்பா நிரபராதி என்று நிரூபிப்பேன் என்று சவால் விட்டார்.
சின்ன மருமகள்:
இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி, சேது சொன்ன வார்த்தை எல்லாம் நினைத்து கோபப்பட்டார். பின் சேதுவின் புகைப்படத்தை பார்த்து கோபப்பட்ட தமிழ் செல்வி, அதை தூக்கி போட்டு உடைக்கிறார். தமிழ் செல்வி அம்மா, எவ்வளவோ சமாதானம் செய்ய பார்த்தார். ஆனால், தமிழ்ச்செல்வி கேட்கவில்லை. இன்னொரு பக்கம் சேது வீட்டிற்கு வந்தவுடனே ஈஸ்வரி வழக்கம் போல தமிழுக்கு சப்போர்ட்டாக பேசுவது போல நடிக்கிறார். கோபத்தில் சேது, அவளைப் பற்றி இந்த வீட்டில் யாரும் எதுவும் பேசக்கூடாது. அவளுக்கும் இந்த குடும்பத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கத்தி விட்டு சென்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோர்ட்டில் ராஜாங்கம்- தாமஸ் வழக்கு நடக்கிறது. ராஜாங்கத்தை
போலீஸ் அழைத்து வருகிறார்கள். ராஜாங்கத்தை பார்த்து அவருடைய குடும்பம் ரொம்பவே கதறி அழுகிறார்கள். ஈஸ்வரி உள்ளுக்குள் ரொம்ப சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் கோர்ட்டில் விசாரணை நடக்கிறது. ஜெனி, என்னுடைய அப்பாவும் ராஜாங்கமும் சேர்ந்து தான் சக்தியை கொலை செய்து விட்டார்கள் என்று சொல்கிறார். அதற்குப்பின் தாமசை விசாரிக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
தாமஸ், அவன் வேறு ஜாதியை சேர்ந்தவன். அதனால் நானும் ராஜாங்கமும் ஒன்றாக சேர்ந்து தான் சக்தியை கொலை செய்ய திட்டம் போட்டோம் என்கிறார். உடனே ராஜாங்கம், அவர் சொல்வதெல்லாம் பொய். நான் குடிக்கவில்லை, நான் சக்தியை கொலை செய்யவில்லை என்று கத்துகிறார். அதற்குப்பின் வழக்கறிஞர், ஜாதி வெறிக்காக தான் ராஜாங்கம் இப்படி செய்தார். ஜெனிக்கு திருமணம் செய்து வைத்ததே ராஜாங்கத்தின் மருமகளும் அவருடைய அப்பாவும் தான் என்றெல்லாம் சொல்கிறார். எல்லா சாட்சிகளும் ராஜாங்கத்திற்கு எதிராக இருக்கிறது. பின் ராஜாங்கத்திடம் விசாரணை நடக்கிறது. ராஜாங்கம், எனக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தமில்லை என்று சொல்கிறார்.






